|
தெரிந்துகொள்வோம் |
|
- |டிசம்பர் 2009| |
|
|
|
|
Christmas - கிறிஸ்துமஸ் Jesus - ஏசு, யேசு, இயேசு Christian - கிறிஸ்துவர், கிறிஸ்துவ Birthday - பிறந்தநாள் Psalms - சங்கீதம் Bible - விவிலியம், பைபிள் Church - தேவாலயம், மாதா கோவில் Mass - பிரார்த்தனைக் கூட்டம், கூட்டு வழிபாடு Winter - பனிக்காலம் Snow fall - பனிப்பொழிவு
கிறிஸ்துவர் என்பது பெயர்ச்சொல் (noun). கிறிஸ்து ஏற்படுத்திய மதத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும்.
'கிறிஸ்துவ' என்பது பெயர் உரிச்சொல் (adjective). உதாரணம்: கிறிஸ்துவ நாடுகள் (Christian countries).
சரி, இந்த சொற்களைப் பாருங்கள்:
பனி - பணி காலம் - காழம் பொழிவு - பொலிவு
பணி என்றால் வேலை; காழம் என்பது ஒருவகை ஆடை; பொலிவு என்றால் ஒளிர்தல் அல்லது அழகு. |
|
ஒரு குறளைப் பார்ப்போமா?
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. (241)
எல்லாச் செல்வங்களையும் விட உயர்ந்த செல்வம் அருளாகிய செல்வம்தான். (பணம், பொன், வீடு போன்ற) பிற பொருள்களாகிய செல்வங்கள் மிகத் தாழ்ந்த குணமுடையவர்களிடமும் உள்ளது.
அருள் என்பது கருணை, இரக்கம். Grace எனப்படும் இறையருளையும் குறிக்கும். கருணையும் இரக்கமும் கொண்ட ஏசுபிரானிடம் இறையருளாகிய உயர்ந்த செல்வம் இருந்தது. அப்படிப்பட்ட உயர்ந்த செல்வம் இருந்த அவரால் பிற மனிதர்களைக் காக்கும் பொருட்டுத் தன் உயிரையே தியாகம் செய்ய முடிந்தது. |
|
|
|
|
|
|
|