வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம் இ.பா. நாடகப் பட்டறையும் ராமானுஜர் நாடகமும் 'ராமானுஜர்' மேடை நாடகம் ரஞ்சனி சுகுமாரன் இசை அரங்கேற்றம் ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை ஷீரடி சாயி பரிவார்: ராம நவமிக் கொண்டாட்டம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
|
|
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா |
|
- |மே 2006| |
|
|
|
மார்ச் 4, 2006 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது.
'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்ற புதுமையான தலைப்புக்கு ஏற்பப் பணிவு, குணம், நாதம், புதுமை எனப் பல மூன் றெழுத்து நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது விழா.
அட்லாண்டாவின் மழலைகள் அணி வகுத்து வந்த ‘அலங்காரம்’ நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற சிறுமி காய்கறிகளால் ஆன ஆடை அணிந்து அவற்றின் சிறப்பைப் பேசியது அருமை.
தலைவர் வி.கே. ரங்கா நமது மொழி, கலை, கலாசாரம் மற்றும் ஒற்றுமை குலை யாமல் காப்பது சங்கத்தின் நோக்கம் என்றார். ‘விட்டுப்போனால் பட்டுப்போகும்’ என்று நினைவுறுத்தியது முத்தாய்ப்பு. உரையை முழுதுமாய்ப் படிக்க: www.gatamilsangam.org |
|
சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பாரம்பரிய, கிராமிய மற்றும் சினிமா நடனங்கள், பேச்சுப்போட்டி, மெல்லிசை, கோஷ்டி கானம், வாத்திய இசை ஆகியவற்றால் அமைந்திருந்தது ‘கதம்பம்’. அனைத்து விவரங்களுக்கும்: www.gatamilsangam.org.
'சமைத்திடுவோம் பாலம்’ என்று பிற மொழி அங்கங்களாகத் தெலுங்கு, பெங்காலி நிகழ்ச்சிகளை வழங்கியது புதுமை. தொகுத்து வழங்கியவர் சுருக்கமாகவும், சிறப்பாகவும் பேசினார்.
கீரன், அட்லாண்டா |
|
|
More