தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம் டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்' வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்' லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம் 'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி
|
|
அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு |
|
- |நவம்பர் 2009| |
|
|
|
|
அட்லாண்டா தமிழ் சபை மக்கள் இந்த கிறிஸ்து பிறந்தநாளைத் தமக்கென்று சொந்தமாக வாங்கிய புதிய தேவாலயத்தில் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நவம்பர் 28ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகின்றன. நன்றியறிதலின் நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் வீடு வீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (Christmas Carols) பாடுவதோடு கிறிஸ்து ஏன் பிறந்தார் என்ற நற்செய்திகளையும் கூறி வருவார்கள். அட்லாண்டா பெருநகரில் வசிக்கும் தமிழ் கிறிஸ்தவர்கள், இந்தச் சிறப்பு பாடல்குழுவினர் தங்கள் இல்லங்களுக்கு வர விரும்பினால் சபை ஆராதனைக் குழுவினரை media@atlantatamilchurch.org pastor@atlantatamilchurch.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிசம்பர் 13ம் தேதி ஞாயிறு காலை 10 மணி ஆராதனையில் போதகர். ஜெ. ஜெயசந்திரன் (கிரேஸ் அசெம்பிளி ஆப் காட சபை, தஞ்சாவூர்) அவர்கள் விசேசித்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளுவார்கள். மதியம் 2:00 மணிக்கு ஞாயிறு பள்ளி மாணவர்கள் வழங்கும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் உங்கள் பிள்ளைகள் பங்கு பெற விரும்பினால் பெயர்களையும் விபரங்களையும் info@atlantatamilchurch.org pastor@atlantatamilchurch.org என்ற? முகவரிக்கு அனுப்புங்கள்.
குடும்பம் குடும்பமாக ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடி இறைவனைப் போற்றுவது மட்டுமல்லாது தங்கள் சந்தோசத்தைப் பாடல்கள் (Family Sing Song Service) மூலம் தெரிவிக்கலாம். டிசம்பர் 20ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு அட்லாண்டா தமிழ்ச் சபை தேவாலயத்தில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பங்குபெற விரும்புவோர் போதகர் அவர்களை pastor@atlantatamilchurch.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். |
|
கொண்டாட்டங்களின் உச்சமாக டிசம்பர் 25ம் தேதி வெள்ளி காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை (Christmas Service) நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேச செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடி கிறிஸ்துமஸ் நாளின் அதிசய உணர்வுகளுக்குள் அழைத்துச் செல்வார்கள். முடிவிலே கிறிஸ்துமஸ் தாத்தா எல்லாச் சிறுவர்களுக்கும் வெகுமதிகளை அளிப்பார். மதியம் கிறிஸ்துமஸ் விருந்து உண்டு.
2009ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கியோர் அதை ஆலயத்தில் முடித்துப் புதுவருடத்தை ஆலயத்தில் தொடங்கும் வண்ணம் இந்த ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி வியாழன் இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். இந்த ஆராதனைக்குக் குடும்பமாக வந்து, பங்கேற்று ஆசீர்வாதம் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு: www.atlantatamilchurch.org |
|
|
More
தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம் டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்' வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்' லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம் 'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி
|
|
|
|
|
|
|