தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம் டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்' வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்' லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம் அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
|
|
|
|
வீட்டு வன்முறை என்பதைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், விரிகுடாப் பகுதியில் உள்ள இரு வீட்டு வன்முறைச் சரணாலயங்களுக்கு நன்கொடை திரட்டுவதற்காகவும், விஷ்வ சாந்தி அகாடெமியின் தலைவியான ஸ்ரீலதா சுரேஷ் அவர்களின் பரதநாட்டிய மாணவியான அம்பிகா கோபாலன், நவம்பர் 21, 2009 அன்று மாலை 4 மணிக்கு சான்ஹோசே CET Soto அரங்கில் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.
'புதுமைப் பெண்' என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சி பாரதியாரின் பாடல்கள் மூலமாக அவருடைய பெண்ணுரிமைக் கனவை நம்கண் முன் நிறுத்த உள்ளது. நிகழ்ச்சியில் குரு ஸ்ரீலதா சுரேஷ் (நட்டுவாங்கம்), திருமதி ஆஷா ரமேஷ் (பாடல்), நாராயணன் (மிருதங்கம்), திருமதி சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
16 வயதான அம்பிகா கோபாலன் இரண்டு வருடங்களுக்கு முன்பே அரங்கேற்றம் செய்திருந்தாலும், தொடர்ந்து குருவிடம் பயிற்சி பெற்று வருகிறார். Alliance for California Traditional Arts (ACTA) இவருக்கு பரதநாட்டியத் திறமையை வளர்க்க மானியம் அளித்திருக்கிறது. ஒரு வீட்டு வன்முறை சரணாலயத்தில் அம்பிகா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
|
இந்நிகழ்ச்சிக்குக் கட்டணமில்லை என்றாலும் சரணாலயத்துக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. நன்கொடை அளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள:
ஷோபா கோபாலன்: 408-717-0808 - shoba-gopal@yahoo.com
நன்கொடைகளை நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலும் அளிக்கலாம்.
கோபால் பஞ்சநதன், சாரடோகா |
|
|
More