கிரிவலம், குருவலம் சென்னை தொலைக்காட்சி
|
|
|
|
எனக்கு மிகவும் பிடித்தது சன்னிவேலில் உள்ள Fair Oaks West Apartment தான். இங்கு, வெளிநாட்டில், இந்தியர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் எத்தனையோ உள்ளன. முதன்முதலாக வருபவர்கள் இந்தியா திரும்பி விட்டோமோ என்று நினைக்கும்படியான சூழ்நிலை. திரும்பிய இடமெல்லாம் நம் சகோதர, சகோதரிகள் 90% நம் நாட்டு மக்கள். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரம், டில்லி, பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஹரியானா (ஏன் நேபாளி கூட) என ஒரே இந்திய மக்கள் வெள்ளம்.
மூன்று நீச்சல் குளங்கள். வெளியிலிருந்தும் வரலாம். தனியாகக் கட்டணம் உண்டு. கிளப் ஹவுஸில் காலை 8 முதல் இரவு 10 வரை காபி, டீ இலவசம். உடற்ப்யிற்சி செய்ய ஜிம். விளையாட பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால் கோர்ட். இன்னும் ஏரோபிக் பயிற்சி, கலைகள் வகுப்பு, குழந்தைகளுக்கு என ஓவியம், எம்பிராய்டரி; பெரியவர்களுக்கு பாட்டு, டான்ஸ், ஸல்ஸா, பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான மையம், விருந்துக்கான ஹால், தியேடர் எல்லாம் இருக்கிறது. காலை நீட்டிக் கொண்டு திங்கள் முதல் வியாழன் வரை நமது படங்கள், நமது சி.டி. வெள்ளிக் கிழமை குழந்தைகளுக்கு என்று அவர்கள் போடுவார்கள். சனி, ஞாயிறு ஆங்கிலப்படங்கள் பார்க்கலாம்.
பால விஹார் வகுப்புகள் உண்டு. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒவ்வொரு சாவி. கீழே இருக்கும் கதவை அந்தச் சொந்தக்காரர் சாவியால் மட்டுமே திறக்க முடியும். மொத்தம் 16 கட்டிடங்கள். அறிஞர்களின் பேச்சு, கலந்துரையாடல், சமையல் வகுப்புகள், டென்னிஸ் என சகலமும் உண்டு. வெளி ஆட்களுக்கு கட்டணத்துடன் அனுமதி உண்டு. அதற்கு என்று கோச்சுகளும் இருக்கிறார்கள். மதியம் நிகம் தலைமையில் 1 மணி முதல் 2.30 மணி வரை ஸத்சங்கம். அங்கும் யாராவது இந்தியா திரும்புகிறார்கள் என்றால் பிரிவு உபசாரம் சாப்பாட்டுடன் (ஆளுக்கு ஒரு ஐட்டம்). |
|
| எதற்கும் குழந்தைகளை அழைக்காது, அவர்கள் நிம்மதியைக் கெடுக்காமல், வாழமுடிவது, எதையும் செய்ய முடிவது நம் மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. | |
மாலை இலவச யோகா வகுப்பு. திருமதி படியா, திருமதி பத்மா ஆகியோரால் பெண்களுக்கு 5 மணி முதல் 6.15 வரை நடத்தப்படுகிறது. காலையில் திரு படியா வகுப்பு நடத்துகிறார். இருவரும் சுவாமி ராம்தேவ்ஜி அவர்களின் சீடர்கள். நாங்கள் ஓய்வு நேரத்தில் காபி கிளப்பில் உட்கார்ந்து பேசுவோம். வெளியில் தனியாகப் போக பஸ் வசதி இருக்கிறது. 26, 22, 55 எல்லாம் அருகில் பஸ் ஸ்டாண்ட். 75 செண்ட்தான். எதற்கும் குழந்தைகளை அழைக்காது, அவர்கள் நிம்மதியைக் கெடுக்காமல், வாழமுடிவது, எதையும் செய்ய முடிவது நம் மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. பெரியவர்களுக்கு நடக்கப் பூங்கா அருகில் இருக்கிறது. நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து இலவசமாகப் படிக்க முடிகிறது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் சுதந்திர தின விழா. நமது தேசியக் கொடியை ஏற்றி, வந்தே மாதரத்தில் ஆரம்பித்து, பெரியவர்கள் பாட்டு, குழந்தைகள் நடனம், எம்.எஸ்.ஸின் மதுரமான குரலில் மதுரம், மதுரம் பாடல், அதற்கு பரதநாட்டியம் என எல்லாம் நிகழ்ந்து, இறுதியில் 'ஜன கண மன' பாடிய பொழுது தென்றல் வீசாமலேயே உள்ளம் சிலிர்த்து விட்டது. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, இது அமெரிக்காவா அல்லது மினி இந்தியாவா என்று. பிறகு டின்னர் 5 டாலருக்கு. கடைகளெல்லாம் Indian Store, Coconut hill, Safeway, Chat House என எல்லாம் அருகில். எல்லோரும் சந்தோஷமாக, பிள்ளைகளை நிம்மதியாக வாழ வைக்கும் அபார்ட்மெண்ட் இது. எல்லோருக்கும் ஈடு கொடுத்து, சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த திரு. டேவிட்டை எத்தனை பாராட்டினாலும் தகும். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு 24 மணி நேரம் போதவில்லை.
பத்மா திலக், கலிபோர்னியா |
|
|
More
கிரிவலம், குருவலம் சென்னை தொலைக்காட்சி
|
|
|
|
|
|
|