'பலே பாண்டியா' 'திருநங்கை'யில் திருநங்கைகள் அருண் விஜயின் 'மாஞ்சாவேலு' கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல' எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்' மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி தீபாவளித் திரைப்படங்கள்
|
|
ஈழத்தமிழர்களின் முதல் திரைப்படம் - '1999' |
|
- |அக்டோபர் 2009| |
|
|
|
|
வட அமெரிக்காவில் நடக்கும் முதல் ஐந்து பிரபலமான திரைப்பட விழாக்களுள், கனடாவில் நடைபெறும் வன்கூவர் சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றாகும். 2009 அக்டோபர் 18 முதல் நவம்பர் 2 வரை நடைபெற இருக்கும் இவ்விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். இவ்விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 350 திரைப்படங்களில் ஈழத்தமிழர்களின் முதல் படைப்பு என்ற பெருமையைப் பெறுகிறது '1999'. யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது ரொரன்ரோவில் வசித்து வரும் லெனின் எம். சிவம் இதனை இயக்கியுள்ளார். பகவான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 'கற்பனாலயா' தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்களித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தில் குழந்தைப் பருவத்திலேயே தமது உறவுகளைப் பறிகொடுத்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கைப் பற்றிய கதைதான் '1999'. பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் ராஜ்குமார் தில்லையம்பலம். பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஈழ, கனடாப் பாடகர்கள் பாடியுள்ளனர். இந்தப் படம் 575 இடங்களில் திரையிடப்பட உள்ளது.
தொடர்புக்கு: சபேசன் ஜெயராஜ சிங்கம் (416) 271-9514; sabesan.jeyarajasingam@gmail.com |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
'பலே பாண்டியா' 'திருநங்கை'யில் திருநங்கைகள் அருண் விஜயின் 'மாஞ்சாவேலு' கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல' எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்' மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி தீபாவளித் திரைப்படங்கள்
|
|
|
|
|
|
|