அம்பைக்கு இயல் விருது
|
|
AAMI விருது பெறும் குருபிரசாத் மாதவன் |
|
- |ஜூலை 2009| |
|
|
|
|
மருத்துவக் கருவி மேம்பாட்டுக் கழகம் (Association for the Advancement of Medical Instrumentation) 2009க்கான தொழில்முறைச் சாதனையாளர் விருதை குருபிரசாத் மாதவனுக்கு வழங்கியுள்ளது. பிங்காம்டனிலுள்ள நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான மாதவன் ஆஸ்டியோபோரோஸிஸ், இதய நோய் போன்றவற்றில் பெரிதும் உதவும், உடலின் கீழ்ப்பகுதியில் ரத்த ஓட்டத்தைத் தூண்டும், ஒருவகை நரம்பு-தசைச் சிகிச்சை முறையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். “உடற்கூறு மருத்துவப் பொறியியல் குறித்த செய்திகளை மக்களுக்கும் அரசியல் சமுதாயத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற எனது ஆர்வத்தை இந்த விருது தூண்டியுள்ளது” என்கிறார் மாதவன். ஜூன் 7, 2009 அன்று பால்டிமோரில் நடந்த AAMIயின் வருடாந்திர மாநாட்டில் மாதவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. |
|
சாதனையாளரைத் தென்றல் வாழ்த்துகிறது. |
|
|
More
அம்பைக்கு இயல் விருது
|
|
|
|
|
|
|