சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம் மிச்சிகன் தமிழ்ச் சங்க விழா கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா பெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம் வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம் சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை டொரொண்டோவில் திருவையாறு. ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
|
|
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம் |
|
- ராதா அக்கூர், கல்பனா ஹரிஹரன்|ஜூன் 2009| |
|
|
|
|
அன்னையர் தினமான, மே 10, 2009 அன்று மிச்சிகன் தமிழ் சங்கத்தின் ஆதரவில், வெங்கடேசன் அவர்களின் பிரம்மாண்ட சரித்திர படைப்பான 'ப்ரம்மரிஷி' நாடகம் சிறப்பாக அரங்கேறியது. நல்ல கதை அம்சம், சிறப்பான நாடக அமைப்பு, கச்சிதமான பாத்திரத் தேர்வு, இனிய இசை, நடனச் சேர்க்கை ஆகியவற்றின் அற்புதக் கலவையாக மிளிர்ந்தது ‘பிரம்மரிஷி'. 15லிருந்து 70 வரையிலான கலைஞர்களை மேடையில் ஏற்றி, ஓர் அருமையான படைப்பை அளித்த வெங்கடேசனுக்கு 'மிச்சிகன் நாடகக் காவலர்' என்ற பட்டத்தை அளித்தனர்.
விஸ்வாமித்ரராக வேடம் தரித்த நிரஞ்சன் ராவ் நடிப்பு அற்புதம்; வசிஷ்டராக சேதுராமன் உன்னதம்; தேவேந்திரனாக வீரா அக்கூர் ஆவேசம்; திரிசங்குவாக சதிஷ் சுப்ரமணியன் அசத்தல்; நாரதராக லலிதா ரவி மிகப் பொருத்தம்; தேவர்களாக உருவெடுத்த ஹரிஹரன், ரங்கஸ்வாமி, ராஜ்குமார், நிரஞ்சன் வரதராஜன், ரங்கராஜன், பிச்சைய்யா ஆகியோரின் ஒருமித்த நல்ல நடிப்பு; மேனகையாக ஆஷா நடனமும் நடிப்பும், ஊர்வசியாக ஸ்வாதி நடனமும் கலக்கல்; கிருத்திகா, அமிர்தா,கீர்த்தனா, பூர்ணிமா, அருண், அர்ஜுன், சஞ்ஜீத், நரேன், மினு, சித்ரா ஆகியோரும் சிறப்பாக தத்தம் பாத்திரங்களைச் செய்தனர். தேவிகா ராகவனின் நடன அமைப்பும், சாந்தப்ரகாஷின் பாடலும் இனிமை; மேடையை நிர்வகித்த விச்வநாதன், ரவி, அம்புஜா வெங்கடேசனுக்கும், விடியோ ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் உருவாக்கிய நிரஞ்சன் வரதராஜன், கையாண்ட பாலநேத்திரம் ஆகியோருக்கும் கைத்தட்டல். இந்திர சபையமைப்பு பிரமாதம். |
|
வண்ண உடைகள், மிளிரும் நகைகள், ஜொலிக்கும் கிரீடங்கள், இந்திரனின் வஜ்ராயுதம், திரிசங்கு வேடம், யக்ஞம் மேடையமைப்பு, மிதிலை மாளிகையமைப்பு, சீதா கல்யாணத்தில் சிவ தனுசு எல்லாமே நாடகத்திற்கும் மேடைக்கும் மேலும் மெருகூட்டின. நல்லதொரு புராண நாடகத்தை நடத்த வழிவகுத்த தமிழ் சங்கத்துக்குப் பாராட்டுக்கள்.
ராதா அக்கூர், கல்பனா ஹரிஹரன் ட்ராய், மிச்சிகன் |
|
|
More