இட்லி வகைகள் காஞ்சிபுரம் இட்டலி சாண்ட்விச் இட்டலி பூரண இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
ரவை - 2 கிண்ணம் தயிர் - 1 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு - சிறிதளவு மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவு (தாளிக்க) பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை |
|
செய்முறை
ரவையை நெய் விட்டு நன்றாகச் சிவக்க வறுத்து எடுக்கவும். பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகிய வற்றை நெய்/எண்ணெய் விட்டு வறுக்கவும். கெட்டித் தயிரில் வறுத்த ரவை மற்றும் பருப்புகள் ஆகியவற்றைப் போடவும். இதில் மிளகு சீரகம் இவற்றைப் பொடிசெய்து கலக்கவும். பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுக் கலக்கவும். தேவையான அளவு உப்புச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஊறவிடவும். இட்டலித் தட்டில் எண்ணெய் தடவிக் கரண்டியால் ரவைக்கலவையை ஊற்றவும். வேகவிடவும். இட்டலி தயார். நிறைய ரவையை வறுத்துத் தாளித்து வைத்துக் கொண்டால் அவசரத்திற்குச் செய்ய செளகரியமாக இருக்கும். தயிர் கொஞ்சம் புளித்து இருந்தால் நல்லது.
தங்கம் ராமசாமி |
|
|
More
இட்லி வகைகள் காஞ்சிபுரம் இட்டலி சாண்ட்விச் இட்டலி பூரண இட்டலி
|
|
|
|
|
|
|