இட்லி வகைகள் காஞ்சிபுரம் இட்டலி சாண்ட்விச் இட்டலி ரவை இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 3 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1 கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்துமல்லி |
|
செய்முறை
வழக்கம் போல் இட்டலிக்கு முதல்நாளே அரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் பருப்புகளை ஊறவைத்து பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து லேசாக அடுப்பில் கிளறி கறிவேப்பிலை, கொத்துமல்லி போடவும். இட்டலித் தட்டில் எண்ணெய் தடவி ஒரு சிறு கரண்டி இட்டலி மாவை விட்டு மேலாகப் பூரணத்தைத் தட்டையாகத் தட்டி வைத்து, அதற்கும் மேலே திரும்ப ஒரு சிறு கரண்டி இட்டலி மாவு ஊற்றவும். வேகவிட்டு எடுக்கவும். தக்காளி, தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
இட்லி வகைகள் காஞ்சிபுரம் இட்டலி சாண்ட்விச் இட்டலி ரவை இட்டலி
|
|
|
|
|
|
|