இட்லி வகைகள் சாண்ட்விச் இட்டலி பூரண இட்டலி ரவை இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 கிண்ணம் உளுந்து - 1/2 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி மிளகு, சீரகம், சுக்குப்பொடி, பெருங்காயம் - 1 தேக்கரண்டி (ஒவ்வொன்றும்) கெட்டித்தயிர் - 1 கிண்ணம் நல்லெண்ணெய் - 1 கிண்ணம் கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப நெய் - சிறிதளவு |
|
செய்முறை
அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கவும். மூன்று மணிநேரம் ஊறியபின் களைந்து சற்று ரவை போல அரைத்து உப்புப் போட்டு வைக்கவும். மறுநாள் தயிர், எண்ணெய், நெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும். மிளகு, சீரகம் பொடிசெய்து போட்டு சுக்குப் பொடியும், கருவேப்பிலையும் போடவும். சிறிய கிண்ணங்களில் எண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றி ஆவியில் வைத்து வேகவிட்டு எடுக்கவும் சிலர் வெறும் மிளகு, சீரகம், சுக்குப்பொடி மட்டும் போட்டுச் செய்வார்கள். தாளிக்க மாட்டார்கள்.
தங்கம் ராமசாமி |
|
|
More
இட்லி வகைகள் சாண்ட்விச் இட்டலி பூரண இட்டலி ரவை இட்டலி
|
|
|
|
|
|
|