சாதனைப்பாதையிலே தீபா ராஜகோபால் சுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம் சாந்தி ஓர் அமைதிப்பயணம்
|
|
கலிபோர்னியா பாடபுத்தக சர்ச்சை |
|
- |மே 2006| |
|
|
|
கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்து மதம் குறித்த சர்ச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் பல கருத்துக்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து பதிப்பித்து வரும் தென்றலுக்கு நன்றி. அமெரிக்க வெகுஜன கலாசாரப் பின்னணியில் இந்து மதம் கேலிச் சித்திரமாக்கப்படுவதை, பாடங்களில் மட்டுமல்லாமல், டி.வி., திரைப்படம் முதலான பல ஊடகங்களிலும் காண முடிகிறது.
டாக்டர். அலெக்ஸ் அலெக்சாண்டர் என்ற இந்திய வழிக் கிறித்துவ அமெரிக்கர் இவ்வாறு எழுதுகிறார்: "India, in my opinion receives the worst treatment of all at the hands of our teachers of world history... during the last three or four decades, the negative images of India and Hinduism in particular have been promoted by our movies and talk show pundits (Indiana Jones, Oprah Winfrey, 60 Minutes et al.)".
இந்தியாவின் பெருமை தரும் வரலாற்று உண்மைகளை இருட்டடிப்பதும், 'caste, curry, cow' என்ற அளவில் இந்திய கலாசாரத்தைக் குறுக்குவதும் சிறுமைப்படுத்துவதும் இந்தியர்களைத் தாழ்வுணர்த்தி அடக்கியாள அக்காலக் காலனியாட்சி கைக்கொண்ட அணுகுமுறை. இந்தியக் கலாசாரம், இந்து மதம் குறித்த பாடத்திட்டங்களில் இன்றும் இத்தகைய சிறுமைப்படுத்தல் அணுகுமுறை ஒருதலைப்பட்சமாக, அதுவும் 'e pluribus unum' என்று சொல்லி வேற்றுமையைப் கொண்டாடும் ஒரு சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படுவது இந்துக்களால் மட்டுமல்ல, அனைவராலுமே கண்டிக்கப் படவும் எதிர்க்கப்படவும் வேண்டிய ஒன்று.
அருணகிரி சாண்டா க்ளாரா, கலி.
கலி·போர்னியா பாடப் புத்தகங்களில் அறியாமையால் செய்த பிழைகளையும், அலட்சியத்தால் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி அதைத் திருத்தும் முயற்சிகளில் எந்த நடுநிலையாளருக்கும் எதிர்ப்பு இருக்காது. ஆனால் அதையே காரணம் காட்டித் தங்களது கண்ணோட்டத் திற்கு ஏற்ப இந்திய வரலாறையும், இந்து சமய அனுபவங்களையும் திரித்து அரியணையேற்றினால் அதில் பலர் அந்நியப்பட்டுத்தான் போவார்கள்.
கலவை வெங்கட் அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அவர் சாதுரியமாகத் தன் வாதங்களை முன்வைத்துள்ளார். உதாரணங்களாலும் உவமைகளாலும் வாதத்தை வெல்ல முயலலாம். உண்மையை மாற்ற முடியாது. அவ்வையார், காரைக்கால் அம்மையார், திருமூலர், திருவள்ளுவர் முதலியவர்கள் பற்றிய குறிப்பு புத்தகங்களில் காணப் படவில்லை என்பது உண்மையே. அதே போல் இந்துச் சார்பு அமைப்புகள் பரிந்துரைத்த மாற்றங்களிலும் அது காணப்படவில்லை. மேலும் பாரதத்தின் ஆதி வரலாறும், ஆரிய வருகையும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி கொண்டு வரலாற்று வல்லுனர்கள் சுட்டுவதையே பாடப்புத்தகம் குறிக்கின்றது. ஆனால் இந்து அமைப்புகள் பரிந்துரைத்த மாற்றங்கள் அவர்களது கற்பனை உலகத்தில் காணும் பாரத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. பாடபுத்தகத்தின் சர்ச்சைக்கு உரிய வாக்கியங்களையும், அதற்கு அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களையும் பின் வரும் சுட்டியில் காணலாம்: http://www.friendsofsouthasia.org/textbook/TextbookEdits.html
சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் நம் வரலாற்றையும், இந்து சமயத்தையும் தரக் குறைவாக முன்வைக்க முயல்கின்றது என்றோ, பல பொய்த்தகவல்களைச் சேர்த்துத் திரித்துக் கூற முற்படுகின்றது என்றோ, அதனால் இங்கு படிக்கும் என் மகள் ஏளனத்திற்கு ஆளாகி நாளும் அழுது வீடு திரும்புகின்றாள் என்பதோ, உண்மைக்கு அப்பாற்பட்டது.
முருகனை மனதில் முன் வைத்துத்தான் என் நாட்களை நான் தொடங்குகின்றேன். நானும் ஓர் இந்துவே. ஆனால் வள்ளலாரின் வேண்டுதல்தான் எனக்கும்: மதம் என்னும் பேய் என்னைப் பிடிக்காதிருத்தல் வேண்டும். கலி·போர்னியா பாடப் புத்தகத்தின் குறைகள் என் மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்துடன் எழுதப் பட்டவையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இந்து அமைப்புகள் பரிந்துரைக்கும் மாற்றங்கள் உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சிகளாக உணர்கின்றேன்.
குமார் குமரப்பன், ·பிரிமான்ட், கலி. |
|
தென்றல் (ஏப்ரல் 2006) இதழில் 'தோற்பது நாமல்லவோ?' படித்தேன். நாம் பலவற்றில் தோற்கிறோம் என்பதை ஒப்புக் கொண்டாலும் சிலவற்றை என்னால் ஒப்ப முடியவில்லை.
இந்துப் பெண்கள் கல்வி முதலியவற்றில் பல தடைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை அவர் மறுத்திருக்கிறார். ஆண்களாகிய நாம் அவர்களுக்கு உண்மையாகவே சம உரிமை தந்திருக்கிறோமா என்பதை அவர் தன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும்.
அவர்கள் சம்பாதித்தால் நாம் வசதியாக வாழலாம் என்பதற்காகவே நாம் படித்த மனைவியரை மணக்கிறோம். மற்றப்படி அவர்கள் சீக்கிரம் எழுந்து, சமைத்து, வீட்டுவேலை எல்லாவற்றையும் செய்து, குழந்தைகளைத் தயார் செய்து பள்ளியில் கொண்டு விட்டு பிறகு அலுவலகம் போகிறார்கள். மாலை அலுவலகத்திலிருந்து வந்து மறுபடியும் சமையல், குழந்தை. இதுதானே இங்கும் நடக்கும் யதார்த்தம்?
ஹரிஜன்களை தலித் என்று அழைப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஹரிஜன் என்று அழைப்பதில் என்ன தவறு? அவர்கள் முன்னேற்றத்துக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?
சிவசங்கரன், கூபர்டினோ, கலி.
தென்றல் (ஏப்ரல் 2006) இதழில் கலவை வெங்கட் அவர்களின் "தோற்பது நாமல்லவோ" என்ற கட்டுரையையும், அதற்கு முன்பு வெளியான பல்வேறு கருத்துக்களையும் படித்து வருகிறேன்.
பாடத் திட்டக் குழு இந்து மதத்தில் உள்ள ஒரு சில தவிர்க்கப் பட வேண்டிய குறைபாடுகளை மட்டுமே பிரதானப் படுத்தி அதன் சிறப்புக்களை மறைத்துத் தனது பாடங்களை அமைத்துள்ளதாகத் தெரிகிறது. அதே சமயத்தில் பிற மதம் சம்பந்தப்பட்ட பாடங்களில் அவற்றில் உள்ள பிற்போக்கான கொள்கைகள், நம்பிக்கைகள் எவை பற்றியும், அதே பாடப் புத்தகங்கள் கண்டு கொள்ளாமல் செல்கின்றன. இந்து மதத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களிடம் வெறுப்புத் தோன்றும் விதமாகச் சித்தரிக்கிறது. இந்த இரட்டை வேடத்தையும், பாரபட்சமான போக்கையும் சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்துவும் கண்டிப்பது அவசியம். ஒவ்வொரு கலி·போர்னியா வாழ் இந்துவும் எதிர்ப்புக் குரல் கொடுக்காததன் காரணமாகவே ஒரு சில அக்கறையுள்ள இந்து அமைப்புகள் இதில் தலையிட நேரிட்டுள்ளது. வரவேற்பதற்குப் பதிலாக அதை அரசியல் ஆக்குவதும் போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அந்த அமைப்புக்களைத் தீவிரவாத இந்துத்துவ அமைப்புகள் என்று எழுதுவதும் விஷமத்தனமான காரியமாகும்.
தீண்டாமை, இந்தியாவில் உள்ள ஜாதிக் கொடுமைகள், அரசாங்கத்தின் மெத்தனம் பற்றிப் பேசுவதற்கும் கலி·போர்னியா மாகாணக் கல்வித் திட்டக் கூட்டம் இடமல்ல. இங்கு எழுப்பப் படவேண்டிய ஒரே கேள்வி 'ஏன் இந்து மதத்திற்கு மட்டும் இந்த பாரபட்சம்?' என்பதுதான்.
ச.திருமலைராஜன் ·ப்ரீமாண்ட், கலி. |
|
|
More
சாதனைப்பாதையிலே தீபா ராஜகோபால் சுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம் சாந்தி ஓர் அமைதிப்பயணம்
|
|
|
|
|
|
|