மிசௌரி தமிழ்ச் சங்கம்: சிறாருக்குப் போர்வை வழங்கிய இளைஞரணி லெமாண்ட் ஹிந்து ஆலயம் தைப்பூசத் திருவிழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல், புத்தாண்டு விழா மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாள் மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
|
|
அட்லாண்டாவில் நிகிஜிஷி முப்பெரும் விழா |
|
- |மார்ச் 2009| |
|
|
|
|
பிப்ரவரி 14, 2009 அன்று அட்லாண்டா பெருநிலத் தமிழ்ச் சங்கம், தைப்பொங்கல், இந்தியக் குடியரசு தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகியவற்றை முப்பெரும் விழாவாகக் கொண்டாடியது. சிறப்பு விருந்தினராக 'அம்முவாகிய நான்' திரைப்படத் தயாரிப்பாளர் திரு ரூஃபஸ் பார்க்கர் கலந்து கொண்டார். ரவி பழனியப்பன் வரவேற்புரை வழங்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
'எல்லோரும் சேர்ந்திருப்போம்', 'பொங்கலோ பொங்கல்' நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. 3-5 வயதுவரை உள்ள குழந்தைகள், மாறுவேடப் போட்டியில் சுபாஷ் சந்திர போஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், வீர சிவாஜி, பாரதியார், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். ஆகியோரைக் கண்முன் நிறுத்தினர். பிரபவ் பிரதீப் முதல் பரிசையும், பிரணவ் பிரதீப் இரண்டாவது பரிசையும், சமிக்ஷா ஸ்ரீராம் மூன்றாவது பரிசையும் பெற்றனர்.
அட்லாண்டா தமிழ்ச்சங்கத் தலைவர் (GATS) சந்த் குப்புசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். விஜயகுமார் வேலு அவர்கள், AIDS ஆராய்ச்சிக்காக தமிழ்ச் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அமெரிக்கத் தமிழ் அமைப்பின் (ATMA) தலைவர் ஆதிநாராயணன் அவர்கள் ATMA பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். தெலுங்கு மற்றும் கன்னட சங்கத் தலைவர்களான சத்தியநாராயண ரெட்டி, ராமசாமி ஆகியோர் இந்தியர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினர். வித்யா ரமேஷ் வழங்கிய நாட்டுப்புறப் பாடலும், ஆறு வயதுச் சிறுமி ரக்ஷிதா ஐயரின் ‘முகுந்தா முகுந்தா' பாடலும், மல்லாரி, பாதஜதிகள், சத்ஜம் போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளும் நமது பாரம்பரியக் கலைகளை நினைவூட்டியதோடு விழாவைச் சிறப்பாக்கின. கண்ணன்-ராதா நாட்டியமும், ஐஸ்வர்யா நரேந்திரனின் கரயோகி பாடல்களும், இசைக் குழுவினரின் காதல் மெட்டுக்களும் காதலர் தினத்திற்கு ஏற்றதாக இருந்தன. |
|
இலங்கைத் தமிழரின் அவல நிலையை வானதி தயாள ரூபன் விளக்கினார். அட்லாண்டாவிற்கு அகதிகளாக வந்திருக்கும் பூடான் மக்களின் தேவைகளை அறிந்து உதவும் வாய்ப்பு GATSன் நிதிக்கொடைக் குழுவுக்குக் கிடைத்தது.
‘ஆட்டம் கொண்டாட்டம்', 'அம்மாடி ஆத்தாடி', நாக்க மூக்க', 'நாட்டுப்புற நையாண்டி' போன்ற நிகழ்ச்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. FeTNA-2009 தமிழ் விழா அட்லாண்டாவில் நடக்க இருப்பதால் அது குறித்த விவரங்களை தன்னார்வத் தொண்டர்கள் பகிர்ந்து கொண்டனர். திருமதி பூங்கோதை ராம்மோகனின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.
ஜெயமாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More
மிசௌரி தமிழ்ச் சங்கம்: சிறாருக்குப் போர்வை வழங்கிய இளைஞரணி லெமாண்ட் ஹிந்து ஆலயம் தைப்பூசத் திருவிழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல், புத்தாண்டு விழா மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாள் மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
|
|
|
|
|
|
|