பரோட்டா செய்து தரட்டா? கடலைப்பருப்பு பராத்தா பனீர் பராத்தா வெந்தயக்கீரை மேத்தி பராத்தா வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
|
|
|
|
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கிண்ணம் புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாய் நறுக்கியது) - 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி நெய் - 4 தேக்கரண்டி எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை கோதுமை மாவைப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். புதினாவைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் உப்பு, மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி எல்லாம் சேர்த்து சுருள வதக்கி எடுத்து, சிறு உருண்டை கோதுமை மாவைச் சப்பாத்தியாகச் செய்து, மேலாக 1 தேக்கரண்டி புதினா கலவையை சமமாகத் தடவிக் கொண்டு மேலாக இன்னொரு சப்பாத்தி இட்டுப் போட்டு மூடி குழவியால் லேசாக இடவும். பூரணம் வெளியில் வராமல் செய்ய வேண்டும். தோசைக் கல்லில் நெய் தடவி வெந்து எடுக்கவும். இந்த பராத்தா வெகு சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி, சப்ஜி வைத்தால் மிக நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு: கோதுமை மாவிற்குப் பதில் மைதாமாவும் போட்டு பராத்தா செய்யலாம். பட்டாணி, முள்ளங்கி, முட்டைகோஸ் இது போன்ற எல்லா கறிகாய்களிலும் மேற்சொன்ன முறைப்படி பராத்தா செய்யலாம். வெறும் வெங்காயத்திலும் கூடச் செய்யலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
பரோட்டா செய்து தரட்டா? கடலைப்பருப்பு பராத்தா பனீர் பராத்தா வெந்தயக்கீரை மேத்தி பராத்தா வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
|
|
|
|
|
|
|