மெரீனாவில் கிடைக்காத சுண்டல் வகைகள் பிளாக் ஐடு பீன்ஸ் சுண்டல் மக்காச் சோளம் சுண்டல் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சுண்டல் மொச்சை சுண்டல் காராமணி வெல்லச் சுண்டல் முளைக கட்டிய பயறு சுண்டல் வேர்க்கடலை சுண்டல்
|
|
வாசகர் கைவண்ணம்: பாதுஷா |
|
- |ஜனவரி 2009| |
|
|
|
|
தேவையான பொருட்கள் மைதா மாவு - 3 கிண்ணம் சமையல் சோடா, பேகிங் பவுடர், மைதா மாவு (மூன்றும் கலந்து சலித்தது) - 1 கிண்ணம் வெஜிடபிள் ஷார்ட்னிங் - 1 கிண்ணம் சர்க்கரை - 4 கிண்ணம் பொடித்த சர்க்கரை - 1 தேக்கரண்டி பால் - தேவைக்கேற்ப முந்திரி-பொடித்தது - 3 மேசைக்கரண்டி ஏலப்பொடி - 1/4 மே.கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு |
|
செய்முறை மைதா மாவு, சலித்த மாவு, வெஜிடபிள் ஷார்ட்னிங் இவற்றுடன் இளம் சூடான பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து பத்து நிமிடம் வைக்கவும். பின் உருண்டையாக உருட்டி, வடை போல் தட்டவும். மிகக் குறைந்த சூட்டிலுள்ள எண்ணெயில் பொன் நிறமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (பாதுஷாவின் சுவை மிகவும் மெதுவாக வேக வைப்பதில் தான் அடங்கியிருக்கிறது) ஒரு பாத்திரத்தில் 4 கிண்ணம் சர்க்கரையுடன், 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகுப் பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். பின் அடுப்பை அணைத்து ஏலம், முந்திரிப் பொடி பாகில் சேர்க்க வேண்டும். சூட்டுடன் பாதுஷாக்களை சர்க்கரைப் பாகில் நன்றாக அமிழ்த்திச் சில நிமிடங்கள் வைத்திருந்து பின் தட்டில் எடுத்து வைக்கவும். சர்க்கரைப்பாகு பாதுஷா மேல் வெள்ளையாகப் பூத்துக் கொண்டு சாப்பிடச் சுவையாக இருக்கும். பல நாட்கள் கெடாது. ‘டோ நட்' போன்ற சுவையுடன் இருப்பதால் குழந்தைகளும் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள்.
வர்தினி நாராயணன், கலிபோர்னியா |
|
|
More
மெரீனாவில் கிடைக்காத சுண்டல் வகைகள் பிளாக் ஐடு பீன்ஸ் சுண்டல் மக்காச் சோளம் சுண்டல் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சுண்டல் மொச்சை சுண்டல் காராமணி வெல்லச் சுண்டல் முளைக கட்டிய பயறு சுண்டல் வேர்க்கடலை சுண்டல்
|
|
|
|
|
|
|