மெரீனாவில் கிடைக்காத சுண்டல் வகைகள் பிளாக் ஐடு பீன்ஸ் சுண்டல் மக்காச் சோளம் சுண்டல் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சுண்டல் காராமணி வெல்லச் சுண்டல் முளைக கட்டிய பயறு சுண்டல் வேர்க்கடலை சுண்டல் வாசகர் கைவண்ணம்: பாதுஷா
|
|
|
|
தேவையான பொருட்கள் மொச்சை - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 6 கொத்துமல்லி விதை - 1/2 கிண்ணம் கடலைப்பருப்பு - 2 மேசைக் கரண்டி பெருங்காயம் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க |
|
செய்முறை காய்ந்த மொச்சையானால் முதல்நாள் இரவே ஊற வைக்கவும். ஊறியபின், தோல் வேண்டாமென்றால் பிதுக்கி எடுக்கவும். பச்சை மொச்சையானால் ஊற வைக்காமல் உடனே செய்யலாம். மொச்சையை உப்புப் போட்டு வேக வைத்து, தண்ணீரை வடித்து விடவும். கொத்துமல்லி விதை, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, பெருங்காயம் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வெந்த மொச்சையைப் போட்டுக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். மசாலாப் பொடியைப் போட்டுக் கிளறி இறக்கி, கொத்துமல்லியைச் சிறிதளவு நறுக்கிப் போட்டு உபயோகிக்கவும். பொடிக்கு பதில் பாவ் பாஜி மசாலா போட்டும் செய்யலாம். சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More