Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
சத்குரு ஜக்கி வாசுதேவ்
- அழகிய பெரியவன்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeசத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஈஷா யோகம் என்ற யோக முறையை உலகெங்கும் பரப்பி வருகிறார். ஈஷா யோகத்திலும், இயல்பான நடைமுறை விவேகத்திலும் தனித்தன்மை வாய்ந்த சத்குரு அவர்கள், சிறப்பான மானுட சேவைகளும் செய்து வருகிறார். மனம், உடல், ஆன்மா என்று அனைத்துத் தளங்களிலும் ஆன்மீக மேம்பாடு அடைவதை வலியுறுத்தும் இவர், ஐ.நா. சபை, உலக நிதியமைப்பு (World Economic Forum), உலக அமைதிக் குழுமம் (World Peace Congress) போன்ற பல சர்வதேச அமைப்புகளிலும் உரையாற்றி உள்ளார். சத்குரு அவர்கள் “Midnights with the Mystic” உள்ளிட்ட நான்கு புத்தகங்களின் ஆசிரியரும் ஆவார்.

1992-இல் சத்குரு தொடங்கிய ஈஷா அறக்கட்டளைக்கு இன்று அமெரிக்காவில் 25 கிளைகள் உள்ளன. ஈஷா பவுண்டேஷன் பல சமூகநலப் பணிகளைப் புரிந்து வருகிறது. ஈஷா வித்யா என்ற அமைப்பின் மூலம் இந்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், Action for Rural Rejuvenation என்ற அமைப்பின் மூலம் கிராமப்புற வாழ்நிலை உயர்வுக்கும், பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் மரம் வளர்த்துச் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் ஈஷா பவுண்டேஷன் அரும்பணி ஆற்றி வருகிறது.

உள்ளுறை ஆற்றல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நம் செயல்பாடுகளைச் சுய கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து இயங்குபவையாக மாற்றும் அறிவியல், யோகம் எனப்படுகிறது. இதன்மூலம் அமைதி, மகிழ்ச்சி, நேசம் ஆகியவை நம் இயல்பின் மூலமாக இயல்பாகவே சாத்தியமாகின்றன
அமெரிக்காவெங்கிலும் உள்ள ஈஷா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் டென்னஸியில் பசுமை நிறைந்த 1200 ஏக்கர் நிலப்பரப்பில் Isha Institute of Inner Sciences என்ற மையம் நிறுவப்பட்டு வருகிறது. இங்குள்ள ஈஷா கேர் என்ற அமைப்பு சமுதாயத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கும், வேலையிழந்தோருக்கும் இலவச சேவை புரிகிறது. இங்கு ஈஷா கிராமம் என்ற பெயரில் ஓய்வுபெற்றோருக்கான சமுதாய மையமும், யோகம், சித்தம், மற்றும் ஆயுர்வேத மருத்துவமுறைகளின் மூலம் உடல் நலன் பேணும் ஈஷா புத்துணர்வு மையமும் (Isha Rejuvenation Center) நிறுவப்படவுள்ளது. ஈஷா பவுண்டேஷன் உலகெங்கிலும் 150க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. 250,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் இணைந்து செயல்படுகின்றனர்.
Click Here Enlargeஅகப் பொறியியல் (Inner Engineering) என்ற பெயர் கொண்ட ஒரு வாரப் பயிற்சி முகாம் ஒன்றன் அறிமுகப் பயிற்சியாக, ஈஷா யோக முறையில் தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியிலும் லாஸ் ஏஞ்சலஸிலும் ஒவ்வொரு மாதமும் ஈஷா யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த அகப்பொறியியல் பயிற்சி முகாமில் கலந்துரையாடல், சொற்பொழிவு ஆகியவற்றுடன் தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா என்ற உள்ளுறை ஆற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பயில்பவர்களுக்கு மன அமைதி, தெளிவு, ஆழ்மன மகிழ்நிலை, ஆரோக்கியம், உயிர்ப்பான செயல்திறன் மேம்பாடு ஆகியவற்றைத் தர வல்லதாக இந்தப் பயிற்சி உள்ளது. சமூகம், குடும்பம், உலகியல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து அவற்றின் மூலமாகவே ஆன்மீக மேம்பாட்டை அடைய முடியும் என்பதை அகப்பொறியியல் முகாம் எடுத்துக்காட்டுகிறது.

"உள்ளுறை ஆற்றல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நம் செயல்பாடுகளைச் சுய கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து இயங்குபவையாக மாற்றும் அறிவியல், யோகம் எனப்படுகிறது. இதன்மூலம் அமைதி, மகிழ்ச்சி, நேசம் ஆகியவை நம் இயல்பின் மூலமாக இயல்பாகவே சாத்தியமாகின்றன. அதன் பிறகே மனித வாழ்வு முழுமையடைகிறது" என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்.

***


Midnights with the Mystic
"எளிமையின் கம்பீரத்துடன் அக விழிப்புணர்வுத் தேடல்மூலம் உயர் நிதர்சன நிலைக்கு உங்களை செலுத்தக் கூடிய புத்தகம் இது" - இது 'Midnights with the Mystic' என்ற புத்தகம் குறித்து டாக்டர் தீபக் சோப்ரா சொல்வது. செரில் சைமோன், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் மறுபிறப்பு, நேசம், பணம், செல்வம், உறவுகள், மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் குறித்து ஒரு வார காலம் நடத்திய உரையாடல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். அமெரிக்காவில் மே 16, 2008 அன்று வெளியானது. வெளியானவுடனே அமேசான் Top 10 புத்தகங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்து விற்றுத் தீர்ந்தது. அதிலும் ஆன்மீக தத்துவப் பிரிவு நூல்களில் முதல் இடத்தைப் பிடித்தது.

அழகிய பெரியவன்
Share: 




© Copyright 2020 Tamilonline