சரடோகா நகர்மன்ற வேட்பாளர் சூஸி வேதாந்தம் நாக்பால் வேண்டுகோள்: மணீஷுக்கு உதவுங்கள் டாக்டர் ரவி பாலுவின் சென்னை காபி கடை விஸ்வமய - சி.டி. வெளியீடு
|
|
Go4Guru.com - இணையதளத்தில் ஓர் ஆசிரியர் |
|
- |அக்டோபர் 2008| |
|
|
|
|
அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தமிழ், ஹிந்தி, முதலான மொழிப் பாடங்களுக்காகவும், கணிதம், ஆங்கிலம், போன்ற பள்ளிப் பாடங்களுக்காகவும் வார நாட்களிலும், வார இறுதியிலும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, வகுப்பறைகளுக்கு வெளியே காத்துக் கிடப்பது நாம் பார்த்துப் பழகிப் போன ஒன்று.
சில தனியார் நிறுவனங்களில் அதிக மாணவர்களுக்கேற்பச் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக ஆசிரியரால் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. அமெரிக்காவில் பல தமிழ்ச் சங்கங்களும், சில பொது நிறுவனங்களும் தமிழ், ஹிந்தி வகுப்புகளை வார இறுதியில் நடத்தினாலும், தூரம் காரணமாகப் பல மாணவர்களால் படிக்க முடிவதில்லை. இதற்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இணையத்தில் கற்றுக் கொடுக்கும் www.Go4Guru.com
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தை மையமாக வைத்துச் செயல்படும் Go4Guru நிறுவனம், பள்ளி மாணவர்களுக்குத் தமிழ், ஹிந்தி, ஸ்பானிஷ், ஃபிரெஞ்சு முதலான மொழிப் பாடங்களையும், கணக்கு, வேதியியல், இயற்பியல், கர்நாடக சங்கீதம், சுயமேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பாடங்களையும் இணையம் வழியே கற்றுத் தருகிறது.
ஹெட்செட் வசதியுடன் மாணவர்கள் ஆசிரியரிடம் ஆன்லைனில் நேரடியாக உரையாடி, மின் எழுது பலகையின் உதவியுடன் தங்கள் கைகளால் எழுதி, ஆசிரியரிடம் நேரிடையாகக் கற்க முடிகிறது. இவ்வாறு மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே Go4Guru மூலம் அனைத்துப் பாடங்களையும் கற்க முடிவதால், காரில் பயணம் செய்யும் நேரமும், வகுப்பறைகளுக்கு வெளியே காத்துக்கிடக்கும் நேரமும் மிச்சமாகிறது.
Go4Guru.com இணையதள ஆசிரியர்கள் வீட்டுக்கணக்கு மற்றும் மாதாந்திரத் தேர்வுகள் போன்றவற்றை நடத்துவதால், பெற்றோரால் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இதன் ஆசிரியர்கள், அந்தந்த மொழி மற்றும் பாடப் பிரிவுகளில் அனுபவமும், கல்வித்தகுதியும் பெற்றவர்களாக இருப்பதாலும், வகுப்புகள் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் இயங்குவதாலும் மாணவர்களால் மொழி மற்றும் பள்ளிப் பாடங்களைச் சிறப்பாகக் கற்க முடிகிறது. |
|
Go4Guru.com அமைப்பின் நிறுவனர் ஹேமாராணி காயாம்பு அவர்கள். இணையதள வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள:
திருமதி ஹேமாராணி காயாம்பு தொலைபேசி: 410.499.9127; 410.683.6923. மின்னஞ்சல்: tutoring@go4guru.com இணையதளம்: www.Go4Guru.com
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
சரடோகா நகர்மன்ற வேட்பாளர் சூஸி வேதாந்தம் நாக்பால் வேண்டுகோள்: மணீஷுக்கு உதவுங்கள் டாக்டர் ரவி பாலுவின் சென்னை காபி கடை விஸ்வமய - சி.டி. வெளியீடு
|
|
|
|
|
|
|