தென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை
|
|
தெற்காசிய ஸ்பெல்லிங் பீ போட்டிகள் |
|
- |ஆகஸ்டு 2008| |
|
|
|
|
தெற்காசிய விளம்பர நிறுவனமான டச்டௌன் மீடியா (Touchdown Media Inc.) ஸ்டேட்ஃபார்ம் தெற்காசிய ஸ்பெல்லிங் பீ போட்டியை இந்த ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. இதற்கான முதல் மண்டல அளவிலான போட்டிகள் நியூயார்க், நியூஜெர்சி, சிகாகோ, டாலஸ், ஹூஸ்டன், சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், வாஷிங்டன் டி.சி. ஆகிய 8 இடங்களில் நடைபெற்றன. ஒவ்வொரு மண்டலச் சுற்றிலிருந்தும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தரவரிசைப்படி முறையே $500, $300, $200 கல்விநிதியாக Makemytrip.com தருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் முதல் இருவர் மட்டும் ஆகஸ்ட் 16, 2008 அன்று நியூஜெர்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் பங்குபெறுவார்கள். இதில் வெற்றிபெறுபவருக்கு $5000 கல்விநிதியாக வெஸ்டர்ன் யூனியன் வழங்குகிறது. 'தெற்காசியப் போட்டியாளர்களுக்கென்றே ஒரு தனி மேடையை அமைத்துத் தர நாங்கள் விரும்பினோம். அதன் வெளிப்பாடுதான் இது. தெற்காசியர்கள் இதில் சிறந்து விளங்குகிறார்கள்' என்கிறார் டச்டௌன் மீடியாவின் CEO ராஹுல் வாலியா. |
|
அக்ஷத் சேகர், அகினவ் ராவல், சுகன்யா ராய், ஸ்ரீசரண் குமுதவெல்லி, ஜானவி ஐயர், சுருதி ஆனந்த், மௌச்திகா பலூரி, ஸ்ரீஜா ஸ்ரீநிவாசன், அர்ஜுன் ஜோகிமஹந்தி, ஆதித்ய செமுடிபட்டி, அபிஷேக் ரௌத்ரே, விஜய் மனோஹர், பாவிகா ஜோஷி, அஞ்சலி அகர்வால், தேப்னில் சூர், அர்ஜுன் மணிமாறன், ஐஷ்வர்யா பஸ்தபூர், ப்ரியாங்கா டமர்லா, ப்ரேரணா கோலி, இஷ்வாம் சேத்தி என்று பல இந்தியப் பெயர்கள் எல்லா மண்டல வெற்றியாளரிடையேயும் காணக் கிடைக்கின்றன. 8 மண்டலங்களின் 24 பெயர்களில் 20 பேர் இந்தியர்கள் என்பது பெருமையளிப்பதாக உள்ளது. இவர்களில் சில தமிழர் பெயர்களும் உள்ளன.
மேலும் தகவலுக்கு: www.southasianspellingbee.com |
|
|
More
தென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை
|
|
|
|
|
|
|