Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
- |ஜூன் 2008|
Share:
Click Here Enlargeமே 10, 11 தேதிகளில் நியூ ஜெர்ஸியில் நடைபெற்ற முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழாவில் மூவாயிரம் மைல்கள் தள்ளியிருக்கும் ஸான் ஹொஸேயிலிருந்து ஒன்றல்ல, இரண்டு நாடகக் குழுக்களும், ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் தள்ளியிருக்கும் ஹூஸ்டன் மாநகரத்திலிருந்து ஒரு குழுவும், நியூ ஜெர்ஸியில் குழு ஒன்றும் பங்கேற்றன. இவை ஒரே அரங்கத்தில் நான்கு வித்தியாசமான நாடகங்களை மக்களுக்கு வழங்கிச் சாதனை படைத்தன.

நியூ ஜெர்ஸியில் பதினைந்து ஆண்டுகளாக 'ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் (USA)' நாடகக்குழுவை நடத்தி வரும் ரமணி அவர்களே இவ்விழாவின் முதுகெலும்பு. இவருடன் இணைந்து பங்கேற்றவை சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாவிலிருந்து கி஡஢யா மற்றும் அவதார்ஸ், ஹூஸ்டனின் மீனாக்ஷி தியேட்டர்ஸ் ஆகிய குழுக்கள். இரண்டு கதைகள் தற்காலப் பிரச்சனைகள் எவ்வளவு தூரம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதைச் சித்திரிப்பன. கி஡஢யா குழுவினா஢ன் 'இரு Lives; ஒரு Story' கதையில் தீபா ராமானுஜம், கார்த்திக் ராமசந்திரன் நடிப்பு திறமையாக இருந்தது. அதற்கு நேரெதிராக, இது தமிழ் நாடகம்தானா என்று என்று வியக்கும் வண்ணம் ஆங்கிலத்திலேயே பேசியது வேடிக்கையாக இருந்தது. அடுத்த முறையாவது கி஡஢யா நல்ல தமிழிலேயே பேசி நடித்தால் நன்றாக இருக்கும்.

இரண்டாவதாக வந்த அவதார்ஸ் குழுவினா஢ன் 'நினைத்தாலே நடக்கும்' சுவையாக இருந்தது. மணி ராம் அற்புதமாக நடித்திருந்தார். ஆயினும், அம்மவின் தோழி 'சீரியல் செல்வி' (ஜயஸ்ரீ மணி) நடிப்புதான் தலைதூக்கி நின்றது. செந்தமிழர்களுக்கு TV சீ஡஢யல்மேல் தற்சமயம் உள்ள மோகத்தை அருமையாக உணர்த்தினார். பெண்ணின் பாட்டியாக நடித்த ஆச்சியின் புடவைகள் வண்ணமும் பிரமாதம். விளக்குமாறும் கையுமாக வாய் நிறையப் பேசி ரசிகர்களை கவர்ந்ததும் அபாரம்.
அடுத்ததாக 'ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் (USA)' குழுவினர் வழங்கிய 'அவன், அவள், அது'. கதை தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒப்ப அமைந்திருந்தாலும் விறுவிறுப்பில்லை. அருமையான கருத்து எதுவும் வெளிப்படவில்லை. ஆயினும், அவளாக நடித்த சௌந்தரம் திறம்பட நடித்திருந்தார்.

கடைசியாக ஹுஸ்டன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் அளித்த 'தில்லுமுல்லு' ஒரு நகைச்சுவை விருந்து. சென்னைத் தமிழ்க் குடும்பப் பிராட்டிகளின் சினிமா மோகம் ஏற்படுத்தும் வி஡஢சல்களை நன்றாகவே நாடகத்தின் மூலம் உணர்த்தியிருந்தார் சாரநாதன். அவரது இரட்டை வேடம் அற்புதம். கிடுகிடுவென்று இரண்டாவது மாடிக்குக் கீழிருந்து தண்ணீர் எடுத்துப் போகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்று நடித்துக் காட்டியது மனதைவிட்டு அகலாது. பஞ்சமில்லாமல் நிறைவாகச் சி஡஢த்து மகிழ வைத்தது 'தில்லுமுல்லு'. ஒவ்வொரு ஜோக்கும் அசைபோட்டுச் சி஡஢க்க வைத்த நாடகம் என்ற காரணத்தால் நான்கு நாடகங்களில் இந்த நாடகமே முன்னணியில் நின்றது என்பது என் கருத்து.

தீபாவளி பொங்கல் போல ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கத் தமிழ் நாடக விழா தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ராதா அனந்தகிருஷ்ணன், நியூ ஜெர்ஸி
More

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline