லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008 கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
|
|
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008 |
|
- |ஜூன் 2008| |
|
|
|
|
மே 17, 2008 அன்று நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் (IANH) நாஷ்வா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் வசந்தத் திருவிழாவைக் கொண்டாடியது. டாக்டர் ஜே. ஜெயசங்கர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இதில் இடம்பெற்ற பல்சுவை நிகழ்ச்சிகளை ஏறக்குறைய 500 பேர் கண்டு களித்தனர்.
வள்ளி பாமிடிபடியின் மாணவியான மதுமிதா ஸ்ரீராம் கர்னாடக இசை பாடினார். பிரணவ் கோபனும் சஹஜா சுரபனேனியும் இணைந்து நடனமாடினர். தரங் சலூஜா கரோகி பாடியதுடன் நடனமும் ஆடினார். நேஹா பரேக்கின் இளம் மாணவர்கள் பாலிவுட் குழு நடனம் ஆடினர். அபர்ணா பாலாஜியின் சீடர் மேகனா சந்திரா 'போ சம்போ' பாடலைப் பாடினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த வித்வான் ஓ.எஸ். தியாகராஜனிடம் இதற்கு ஒரு பாராட்டும் பெற்றுவிட்டார்.
மணி ஈபுர், லஹர் வெனுதுருபள்ளி, யஷ்வினி, சித்தார்த்த மொபார்த்தி, ப்ரீதி மஹே, பத்மா டபி ஆகியோர் வடிவமைத்திருந்த நடனங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன. நாஷ்வாவின் குமோன் மையம் கல்வித் தேனீ கேடயங்களை வழங்கியது. இதன் உரிமையாளரான ஷஷாங்க் துபே இந்த ஆண்டு தமது அமைப்பு பொன்விழா கொண்டாடுவதை நினைவுகூர்ந்தார். அதனை முன்னிட்டு 50 சதவீதக் கட்டணத் தள்ளுபடியை அறிவித்தார்.
முன்னதாக, சங்கத் தலைவர் பிரித்வி குமார் வரவேற்புரை வழங்கினார். வினீத் ரகுராமன் நிகழ்ச்சிகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார். |
|
ஆங்கிலத்தில்: ரமா ஸ்ரீராம் |
|
|
More