Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
வாழும் கலைப் பயிற்சி வாரம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
CRY நடை- 2008
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா
- கோம்ஸ் கணபதி|ஜூன் 2008|
Share:
Click Here Enlarge2008 ஜூலை 4-6 ஆகிய மூன்று நாட்களில் தமிழ்நாடு அறக்கட்டளை 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற கருப்பொருளில் தனது 34வது நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது. பிட்ஸ்பர்க் நகரின் புறநகரமும், அமெரிக்க இந்தியர்களின் வடவேங்கடமும் ஆன மன்ரோவில் உள்ள எக்ஸ்போ மார்ட்டில் மூன்று நாட்களுக்கு இந்த விழா நடைபெறும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர் இயக்கங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பலன் கருதாது உழைக்கும் இயக்கம் தமிழ்நாடு அறக்கட்டளை. தமிழ்நாட்டின் ஏழைகள்; மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற பெண்டிர் ஆகியோருக்கு உதவுதல்; தமிழுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடும் இலட்சியவாதிகளை வெளிச்சமிட்டுக் காட்டுதல்; இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் துயரங்களை ஓரளவேனும் துடைத்தல்; சில துறைகளில் சிறந்து விளங்கும் இளைய தலைமுறையினருக்கு மேலும் உயர்ந்து செல்ல வழிகாட்டல்; அறிவியல், மருத்துவம், பொறியியல், கணிப்பொறி நுட்பங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து தருதல் என்று பலவகை அரிய பணிகளை மேற்கொள்கிறது தமிழ்நாடு அறக்கட்டளை.

அறக்கட்டளையின் சென்னை அலுவலகத்தில் சந்தித்த பதினாலு வயது சங்கீதா, 'அப்பா இல்ல சார், நான்தான் இஸ்கூலுக்கும் போய்க்கினு, வேலையும் செஞ்சுக்கினு அம்மாவையும் பாத்துக்கினு... தமிழ்நாடு அறக்கட்டளையில் எனக்குக் கொறஞ்ச காசுக்குக் கிடைக்கிற இந்த டிரெயினிங்குக்கு அமெரிக்காவிலிருந்து உதவுற உங்க எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி சார்...' என்னும்போது நமக்கு மனம் நெகிழ்கிறது.

தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு விழாவில் கலந்துகொள்ள வருகிறார். கல்வியில் சாதனை படைத்ததோடு 'குலோத்துங்கன்' என்ற புனைபெயரில் தமிழில் தனக்கென இடம் பெற்றுள்ள டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களுக்கு இவ்வாண்டு அறக்கட்டளை மாட்சிமைப் பரிசினை வழங்கவிருக்கிறது. சாகித்ய அகாதமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம்; நகைச்சுவை அரசர் ராஜாவின் தலைமையில் பட்டி மன்றம்; மகாநாதி ஷோபனாவின் இசைமழை; 'அன்புள்ள சினேகிதி' டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன் வழங்கும் 'வலிமையும் வலியும்' என்ற தலைப்பிலான மகளிர் கருத்தரங்கு; தமிழ்க்கடல் மறைமலை இலக்குவனாரின் உரை; திரைப் பாடகர்கள் மனோ, விஜய் யேசுதாஸ், ப்ரியா குழுவினர் வழங்கும் திரையிசை; 'தென்றலே என்னைத் தொடு' புகழ் ஜெய்ஸ்ரீ; ஜெயா மணியின் மாணவியர் வழங்கும் 'ஜெய, ஜெய பாரதம்'; வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை அரங்கு, மருத்துவர்களுக்கான CME தொழிற்பட்டறை, யோகாசன வகுப்புகள், தொழில்முனைவோர் கலந்துரையாடல் என எல்லாத் தரப்பினருக்குமாகப் பலவகை நிகழ்ச்சிகள் உள்ளன.
இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி முன்னர் குறிப்பிட்ட அறப்பணிகளுக்கு உதவும்.

டாக்டர் பழனிசாமி MDயின் தலைமையில் இவ்விழா குறித்த மற்றும் அறக்கட்டளை குறித்த தகவல்களைப் பெற:
www.tnfusa.org/pghconvention/newsletter.html
www.tnfusa.org
www.tnftnc.org

மேலும் தகவல்களுக்கு: டாக்டர் பழனிசாமி - 412.487.0716

கோம்ஸ் கணபதி, டென்னசி
More

மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
வாழும் கலைப் பயிற்சி வாரம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
CRY நடை- 2008
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
Share: 




© Copyright 2020 Tamilonline