Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சர்ச்சையில் தசாவதாரம்
எங்கள் ஆசான் விஜயகாந்த்
தமிழில் சோல்ஜர்
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
அய்யன்
அடுத்த வாரிசு
சந்தோஷ் சிவனின் Before the Rains
- கேடிஸ்ரீ|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeபிரபல தமிழ் இயக்குனர் சந்தோஷ் சிவனின் முதல் ஆங்கிலப் படமான 'Before the Rains' அமெரிக்காவில் மே 9, 2008 அன்று வெளியாயிற்று. ராஹுல் போஸ், நந்திதா தாஸ், லைனஸ் ரோச் (Law & Order புகழ்), இரண்டு முறை டோனி விருது வென்றுள்ள நடிகை ஜென்னிபர் எஹ்லே ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஓர் இஸ்ரேலியக் குறும்படத்தின் தாக்கத்தால் உருவான இந்தப் படத்தின் கதை கேரளத்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. 1930களில் தேசிய இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது.தனது ஆங்கிலேய எஜமானருக்கும் (லைனஸ் ரோச்) கிராமத்து இளம்பெண்ணுக்கும் (நந்திதா தாஸ்) இடையே ஏற்பட்ட உறவில் சிக்கித் தவிக்கும் இளைஞராக வருகிறார் ராஹுல் போஸ்.

2002ஆம் ஆண்டில் டக் மங்காஃப், ஆன்டி ஸ்பால்டிங் இருவரும் ஆங்கிலப் படங்களைத் தயாரிக்கும் வெளிநாட்டவரைத் தேடத் தொடங்கினர். பிரபல இயக்குனர் சேகர் கபூரின் பரிந்துரையில் சந்தோஷ் சிவனின் 'The Terrorist'ஐப் பார்த்தவுடனேயே அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று. அப்படித் தொடங்கியதுதான் இந்தப் படம். மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கேதி ரேபின் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். ஸ்டீவன் கோஹன் படத்தொகுப்புச் செய்துள்ளார். இசை மார்க் கிலியன். டொரான்டோ , தி ட்ரிபெகா, தி பூசன், லாஸ் ஏஞ்சலஸ் இந்தியத் திரைப்பட விழா ஆகிய விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.

எக்கோ லேக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பான இந்தப் படத்தை மெர்ச்சன்ட் ஐவரி, அடிராண்டக் பிக்சர்ஸ், எக்ஸ்காலிபர் பிக்சர்ஸ், சந்தோஷ் சிவன் ப்ரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சர்ச்சையில் தசாவதாரம்
எங்கள் ஆசான் விஜயகாந்த்
தமிழில் சோல்ஜர்
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
அய்யன்
அடுத்த வாரிசு
Share: 




© Copyright 2020 Tamilonline