Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மத்திய அமைச்சர் ராஜாவுடன் ஒரு சந்திப்பு
சான் டியகோவில் இந்திய இசை நடன விழா
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கத்தின் கலைவிழா
ஆண்டோவர் சின்மயா மிஷன் மஹா சிவராத்திரி
OSAATவழங்கிய நாட்டிய-ராகா 2008
லாஸ் ஏஞ்சலஸ் ஒளவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை
- சர்வ மங்களா|ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlargeஜனவரி 27, 2008 அன்று மலிபு கோவில் கலையரங்கில் தியாகராஜ ஆராதனை நடைபெற்றது. வேதமந்திரத்துடன் தீபா ராதனைக்குப் பிறகு குளோரியா அவர்களின் வரவேற்புரையுடன் தியாகராஜ ஆராதனை இசைவிழா தொடங்கியது. கலிபோர்னியா வைச் சார்ந்த இசை ஆசிரியர்களும் சீடர் களும் சேர்ந்து இசைத்த தியாகராஜரின் ஸ்ரீகணபதினி பாடல், பஞ்சரத்ன கிருதி களுடன் விழாவைத் டங்கினர். இசை ஆசிரியர்கள் கானம் கானசரஸ்வதி, சுபா நாராயணன், பத்மாகுட்டி, சங்கரி செந்தில் குமார், டெல்லி சுந்தரராஜன், பாபு பரமேஸ் வரன், முரளி கிருஷ்ணன், கீதா பென்னட், கல்யாணி சதானந்தம், கல்யாணி வீரராகவன், திருவையாறு கிருஷ்ணன், இந்து, வசந்தா பட்சு ஆகியோர் சீடர்களுடன் இசைமழை பொழிந்தனர். இயக்குனர் கானசரஸ்வதி தன்னார்வக் குழு உறுப்பினர்களும் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு விழாவை நடத்தினர்.

இதர வாக்கியேயக்காரர்கள் நாளையும் ஒன்றுசேர்த்துக் கொண்டாடியதால் முத்து ஸ்வாமி தீட்சிதர், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார், மைசூர் வாசுதேவாசாரியார், சுப்பையா சாஸ்திரி, ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யர், பட்டணம் சுப்ரமண்ய ஐயர், லஷ்மிநாராயண ஐயர், அன்னமாசாரியார், முத்தையா பாகவதர், புரந்தரதாஸர், ஸ்வாதித்திருநாள், ராமஸ்வாமி சிவன், பாபநாசம் சிவன், கானசரஸ்வதி, கடலூர் சுப்ரமண்யம், குரு சுரஜானந்தா, நாராயணதீர்த்தர் ஆகியோரின் கிருதிகளும் பரவசப்படுத்தின. பாபு பரமேஸ்வரன், முரளி கிருஷ்ணன் சிஷ்யர்கள் கீபோர்டும்; வஸந்தா பட்சுவும் சிஷ்யர்களும், கீதா ராகவன் வீணையும், அந்தர ரூப சிவதேவா கிதார் வாத்தியமும் செவிக்கு விருந்து. தன்னார்வக் குழுவினர் பாடிய 'ரகுநாயகா' அருமை. வாத்திய விருந்தில் வயலின், வீணை, கீபோர்டு, மிருதங்கம், கடம், கஞ்சிராவுடன் சங்கீதா 'ஸ்ரீ விஜயலக்ஷ்மி' பாடி பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.
Click Here Enlargeஆதித்யா ப்ரகாஷ், சுபா நாராயணன், பாபு பரமேஸ்வரன், ஹரி அசுரி, ஜெய்கிருஷ்ணன், கார்த்திக், இந்து மற்றும் பலர் மிக அருமையாகப் பாடினர். கானசரஸ்வதி தனது மகள் சங்கீதாவுடன் முருகன் மீது பாடி மெய்மறக்கச் செய்தார். அஜய் நரஸிம்மன், அனு, கிரண் வயலினும், ஸ்ரீனிவாசன், நீலகண்ட குண்டப்பா, ஆதித்யா ப்ரகாஷ், கார்த்திக் மிருதங்கமும், சுந்தர் டாம்பொரினும், லியோனஸ் கடமும் வாசித்து நிகழ்ச்சியைச் சோபிக்கச் செய்தனர். இறுதியில் மலிபு கோவில் சார்பாக ரவீந்திரன் இசை ஆசிரியர்களையும், வாத்ய மேதைகளையும் பாராட்டிப் பேசிட; மல்லிகா கிரிதர், கோபி, கிருஷ்ணா, குளோரியா, சங்கீதா பொன் னாடை போர்த்தி கெளரவித்தனர். அருண் சங்கரநாராயணன் நன்றியுரை வழங்கினார். மங்கள ஆரத்தியுடன் விழா இனிது முடிவுற்றது.

சர்வ மங்களா
More

சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மத்திய அமைச்சர் ராஜாவுடன் ஒரு சந்திப்பு
சான் டியகோவில் இந்திய இசை நடன விழா
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கத்தின் கலைவிழா
ஆண்டோவர் சின்மயா மிஷன் மஹா சிவராத்திரி
OSAATவழங்கிய நாட்டிய-ராகா 2008
லாஸ் ஏஞ்சலஸ் ஒளவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline