சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு' உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
|
|
லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு |
|
- |ஏப்ரல் 2008| |
|
|
|
|
லேர்ன்க்வெஸ்ட் தனது மூன்றாவது இந்திய (கர்நாடக, ஹிந்துஸ்தானி) செவ்வியல் இசை மாநாட்டை போஸ்டனில் ஐந்துநாள் விழாவாக ஏப்ரல் 19, 2008 முதல் நடத்த உள்ளது. இதனை Museum of Fine Arts (MFA), MITHAS (Massachusetts Institute of Technology's Heritage of the Arts of South Asia) ஆகிய அமைப்புகள் உடன் இணைந்து வழங்குகின்றன.
40 பிரபல இசைக் கலைஞர்கள் பங்குபெறும் இந்த மாநாட்டில் 20 கச்சேரிகள் இடம்பெறும். ஹரிப்ரஸாத் சௌராஸியா (ஹிந்துஸ்தானி புல்லாங்குழல்), அருணா சாய்ராம் (கர்நாடக வாய்ப்பாட்டு), அனிந்தோ சாட்டர்ஜி (தபலா), டாக்டர் பிரபா ஆத்ரே (ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு), ஓ.எஸ். தியாகராஜன் (கர்நாடக வாய்ப்பாட்டு), ஷ¤ஜத் கான் (சிதார்), ஜயந்தி குமரேஷ் (வீணை), குண்டேச்சா சகோதரர் கள் (த்ருபத்), ஷஷாங்க் (கர்நாடகப் புல்லாங்குழல்), தேபாஷிஷ் பட்டாசார்யா (ஸ்லைடு கிதார்) ஆகியோரை இவர்களில் முக்கியமாகக் குறிப்பிடலாம். கங்காதர் ராவ் தெலங் வழங்கும் உரை/செயல்முறை விளக்கம், தப்லா மிருதங்கம் குறித்த உரை/செயல்முறை விளக்கம், சிதார் மேதை ரவிசங்கரின் வாழ்க்கை மற்றும் இசையைப் பற்றிய 'ராகா' என்ற ஆவணப்படம் ஆகியவையும் இடம்பெறுகின்றன.
லாப நோக்கற்ற நிறுவனமான லேர்ன்க் வெஸ்ட், இந்தியச் செவ்வியல் இசையைக் கற்பிப்பதையும் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டதாகும். கலந்துரையாடல், செயல் பட்டறை, கச்சேரிகள் ஆகியவற்றைத் தனது மாணவர்களுக்காகவும் பிறருக்காவும் அவ்வப்போது இது ஏற்பாடு செய்கிறது.
'இசையைப் பற்றி அறிந்தோரும் அறியா தோரும் ரசிக்கும்படியாக இந்த ஐந்துநாள் இசை மாநாடு, ஒரு சங்கீத சம்மேளனச் சூழலில் நடத்தப்படும்' என்று கூறுகிறார்கள் இதன் அமைப்பாளர்களான லேர்ன்க்வெஸ்ட் நிறுவனத்தினர். பாஸ்டன் பகுதியின் மியூசியம் ஆப் பைன் ஆர்ட்ஸ், ஸ்டேடா சென்டர் உட்படப் பல அரங்குகளில் இந்நிகழ்வுகள் நடைபெறும். |
|
மேலும் விவரங்களுக்கு: www.learnquest.org/conference2008 (சென்ற ஆண்டு நிகழ்ச்சியைப் பற்றிய சிறிய விடியோ தொகுப்பொன்றையும் இதில் பார்க்க முடியும்) தொலைபேசி: 781.891.8535 மின்னஞ்சல்: Conference2008@learnquest.org
எல்ல நிகழ்ச்சிகளுக்கும், ஒருசிலவற்றுக்கு மட்டும் அல்லது ஒரு நாள் நிகழ்ச்சிக்கு மட்டும் என்று பலவாறாக ரசிகர்கள் நுழைவுச் சீட்டுகளைக் கீழ்க்கண்ட இணையதளங் களில் பெறலாம்:
Sulekha (www.sulekha.com) Lokvani (www.lokvani.com) Maayboli (www.maayboli.com)
நேரடியாக லேர்ன்க்வெஸ்டுக்குக் காசோலை யை அனுப்பியும் சீட்டுகளைப் பெறலாம்.
செய்திக் குறிப்பிலிருந்து.... |
|
|
More
சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு' உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
|
|
|
|
|
|
|