லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு' உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
|
|
சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா |
|
- |ஏப்ரல் 2008| |
|
|
|
|
2008 ஏப்ரல் 19-20 தேதிகளில் சிவன் ·பைன் ஆர்ட்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி (சென்னை) பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா ஒன்றை சான்ஹோசேவில் (கலி.) ஏற்பாடு செய்துள்ளது. ஏறத்தாழ 2000 கிருதிகளை இயற்றியுள்ள ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர் களின் நினைவாக நடத்தப்படும் இவ்விழாவில் இசைப் போட்டிகள் நடைபெறும்.
சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி (சென்னை) நான்கு கிளைகளில் 600 மாணவர்கள், 35 ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்டது. சிவன் அவர்களின் புதல்வியா ராகிய டாக்டர். ருக்மிணி ரமணி அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது.
சங்கீதப் போட்டிகள் ஏப்ரல் 19 அன்று Divine Science Community Center Inc, 1540 Hicks Ave, San Jose, CA 95125 [Ph: (408) 293-3838] என்ற முகவரியில் நடைபெறும். நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 வரை.
ஏப்ரல் 20 அன்று Sanatan Dharma Kendra, 897 Kifer Rd # A, Sunnyvale, CA 94086, (Ph: 408.481.9242) என்ற முகவரியில் காலை 8:30 மணி முதல் நடைபெற இருக்கும் சங்கீத விழாவில் திறமை வாய்ந்த மாணவர்களின் குறுங் கச்சேரிகள் நடைபெறும். பாபநாசம் அஷோக் ரமணி, குருவாயூர் தொரை உட்பட்டோர் நடுவர்களாக இருப்பர். |
|
பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் களும், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். இசை, நடன ஆசிரியர்கள் கௌரவிக்கப் படுவார்கள். 20ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு இதற்கான விழா நடைபெறும். கலி·போர்னியாவில் உள்ள திறமிக்கோருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு காலை 10:30 மணிமுதல் அவர்களது குறுங்கச்சேரிகள் நடைபெறும். இந்தியாவி லிருந்து வந்திருக்கும் கலைஞர்கள் இவர் களுக்குப் பக்கம் வாசிப்பார்கள்.
பாபநாசம் சிவன் அவர்களின் கிருதிகளை ஆதாரமாகக் கொண்ட இந்தப் போட்டி களைப் பற்றிய விவரங்களையும் நுழைவுப் படிவங்களையும் www.shivanisai.com என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நிரப்பிய படிவங்களை ashok ramani10@yahoo.comஎன்ற மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங் கள் வந்துசேரக் கடைசி நாள்: ஏப்ரல் 15, 2008. |
|
|
More
லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு' உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
|
|
|
|
|
|
|