2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் ரம்யா ஹரிசங்கருக்கு ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர் விருது 'பாலம்' கலியாணசுந்தரம்
|
|
தேசிய விருது பெறும் 'டீம் வினய்' |
|
- |டிசம்பர் 2007| |
|
|
|
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட இளம் 'வினய்யைக் காப்பாற்றுங்கள்' (பார்க்க: 'தென்றல்' ஜூன், 2007) என்று நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை (Bone Morrow Tansplant) ஒன்றே வழியாக இருந்தது. ஆனாலும் இவருக்கு இந்தியர்களின் மஜ்ஜையாக ஏற்புடையதாக இருக்கும் என்பதால் 'டீம் வினய்' என்ற குழுவைத் தொடங்கினர். அது அமெரிக்காவில் வாழும் ஆசியர்களிடையே பெரும் விழிப்புணர்வைத் தோற்றுவித்தது. இதன் பலனாகச் சற்றேறக்குறைய 23,000 தெற்காசியர்கள் மஜ்ஜைப் பதிவேட்டில் தமது மஜ்ஜையை அளிக்கப் பதிந்து கொண்டனர்.
இந்த இமாலய சாதனையைப் பாராட்டி 'டீம் வினய்'க்கு ப்ராங்க் ஈ. பீட்டர்ஸன் (ஜூனியர்) தேசிய விருதை தேசிய மஜ்ஜை வழங்குவோர் திட்டம் (National Marrow Donor Program) அளித்து கவுரவித்துள்ளது. வினய்யின் தந்தை பார்த்தசாரதி சக்ரவர்த்தி அவர்கள் இதை நவம்பர் 2, 2007 அன்று பெற்றுக்கொண்டார். |
|
இந்த முயற்சியில் தென்றலும் ஒரு சிறிய பங்காற்றியதற்குப் பெருமைப்படுவதோடு, விருது பெற்ற அணியினரை வாழ்த்துகிறது. |
|
|
More
2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் ரம்யா ஹரிசங்கருக்கு ஹெலனா மொஜெஸ்கா கலாசார பாரம்பரியக் கலைஞர் விருது 'பாலம்' கலியாணசுந்தரம்
|
|
|
|
|
|
|