Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
பாசத்தின் எல்லைக் கோடு...
- சித்ரா வைத்தீஸ்வரன்|செப்டம்பர் 2006||(2 Comments)
Share:
Click Here Enlargeநானும் என் கணவரும் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். மகன், மகள் இருவருமே கல்யாணமாகி இங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். இரண்டு பேருக்குமே ஏறக்குறைய ஒரே நேரத்தில் திருமணம் நடந்து, குழந்தைகளும் ஓரிரு மாத வித்தியாசத்தில் பிறந்தன. ஒவ்வொரு வருடமும் நானும் என் கணவரும் பெண் வீட்டில் மூன்று மாதமும் பிள்ளை வீட்டில் மூன்று மாதமும் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொண்டு வந்திருந்தோம்.

ஒவ்வொரு முறையும் எங்கள் பணம் போட்டு 'டிக்கெட்' வாங்கிக் கொண்டுதான் வருவோம். இப்போது கணிசமாக எங்கள் 'பேங்க் பேலன்ஸ்' குறைந்துவிட்டது. வயதும் ஆகிக்கொண்டு வருகிறது. முன்பு போல உற்சாகமாக வீட்டுவேலையும் பார்த்து, குழந்தைகளையும் கவனித்து கொள்ள முடியவில்லை. எப்படி எடுத்து சொல்வது என்று புரியவில்லை. இன்னும் இரண்டு மாதம் இங்கே தங்கிவிட்டு, பெண் வீட்டிற்கு போக வேண்டும். சொல்லப் போனால், அமெரிக்க அனுபவம் அலுத்து போய்விட்டது எங்களுக்கு. குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் இருக்கத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால், 'at that price!'

இப்படிக்கு...
அன்புள்ள சிநேகிதியே

பாசத்தின் எல்லைக்கோட்டை எங்கே முடிப்பது என்பது தெரியாமல் திணறும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களில் நீங்களும் ஒருவர். இந்தக் காலக்கட்டத்தில் நம் பிள்ளை கள், பெண்கள் பாதுகாப்புக்கும், அரவணைப் புக்கும் பணத்திற்கும் எதிர்பார்த்த நிலை போய் நாம் அவர்கள் அருகாமைக்கும், அன்புக் கும் அணுசரணைக்கும் ஏங்கும் நிலை.

Children take parents for granted. அதுவும் பெற்றோர்கள் பொருளாதார வசதியோடு குழந்கைளை வளர்த்து இருந்தால், அவர்கள் பெரியவர்களாகி பெரிய பொறுப்பில் இருந்தாலும் பெற்றவர்களின் நிதிநிலைமை யைப் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. அதுவே மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பிள்ளைகள், பெண்கள் தங்கள் பெற்றோர்களை நல்ல வசதியில் வைத்துக் கொள்ள வேண்டும், நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இருப்பார்கள்.

பெற்றோர்களுக்கும் பொருளாதார ரீதியில் தங்கள் பிள்ளைகள் கொடுக்கும் சலுகை களை ஏற்றுக் கொள்வதில் ஒரு தன்மான பிரச்சினை இருக்காது. பெருமையும், பெருமிதமும் இருக்கும். வசதி படைத்த பெற்றோர்கள் சிலருக்கு கூச்சம் இருக்கும். இந்த உணர்வு இருக்க வேண்டுமா... கூடாதா என்பது இங்கே தர்க்கம் இல்லை. This is the way of life. எப்படியிருந்தாலும் physical help போன்ற விஷயங்களில் உரிமை எடுத்துக் கொள்வார்கள். ''அப்பாவையும், அம்மா வையும் இங்கே ஆறு மாதம் கொண்டு வந்துவிடலாம். குழந்தைகளுக்கு பாதுகாப்பு, கலாசாரம், பாசம், நம்பிக்கை என்று பல கோணங்களில் இது நல்ல ஏற்பாடு என்று தீர்மானிப்பார்கள்.

முதல்முறை இதுபோன்ற ஏற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்த பெற்றோர்கள், இதுவே வழக்கமாக போகும்போது தாங்கள் ஏதோ 'exploit' செய்யப்பட்டது போல உணருவார்கள். எத்தனை தடவைதான் - Niagra, Walt Disney, உள்ளூர் கோயில், பிறந்தநாள் 'பார்ட்டி' மனதில் அந்த உற்சாகம் போய், சலிப்பு ஏற்பட்டாலும் எங்கே நம்மால் முடியாது என்று சொல்லிவிட்டால், நம் குழந்தைகளின் பாசமும், கண்காணிப்பும் குறைந்து போய்விடுமோ என்ற உணர்வும், ''ஐயோ நாம் முடியவில்லை என்றால், 2 பேரும் வேலை செய்யும் போது அவர்களின் குழந்தைகள் வளர்ச்சி பாதிக்குமே'' என்ற ஆதங்கமும் சேர்ந்து மறுபடியும் தொடருகிறது இந்த பிரயாணம். இது நான் பார்த்து, கேட்டறிந்த வரையில் சொல்கிறேன். நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்.
பிள்ளைகளும், பெண்களும் எடுத்துக் கொள்ளும் உரிமைகளில் சுயநலம் சிறிது அதிகமாக இருந்தால், அதை புரிந்து கொண்டு சமயோசிதமாகவோ (discreet), நேரடியாகவோ (உங்கள் உறவின் தன்மையை பொறுத்தது) உங்கள் நிலைமையை வெளிப் படுத்தி, அதன் பின்விளைவுகளை சந்திப்ப தற்கும் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

அப்பா, அம்மாவின் நிலைமை புரியாமல் நமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டோ மே என்று வருத்தப்படும் பிள்ளை/பெண்களும் இருக்கிறார்கள. ''நாம் இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நமக்கு ஓர் உதவி என்று இல்லாமல், தங்கள் செளகரியத்தை பார்க்கிறார்கள் என்ன சுயநலமான பெற்றோர் கள்'' என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் உங்களுக்கு ஆதங்கம் அதிகம் இருந்தால் உங்கள் பயணத்தை தொடருங்கள். அவர்களின் ஆதிக்கத்துக்கு நீங்கள் அடங்கி போக வேண்டியிருக்கிறது என்று நினைத் தால், நிலைமையை எடுத்துச் சொல்லி, உங்கள் கணவருடன் உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். எந்த முடிவு எடுத்தாலும் அதில் குற்றஉணர்ச்சி இருந்தால், மனதில் நிம்மதி இருக்காது. வயதினால் உடம்பு மனத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், உங்கள் உடலின் சொல்படி கேளுங்கள்!
பெற்றோர்களோ, குழந்தைகளோ பாசத்தில் சுயநலம் கலந்துதான் இருக்கும். வேறு வழியில்லை.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 


© Copyright 2020 Tamilonline