Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
பிறந்த மண்
மறுபடியும் விடியும்
காந்தி தந்த பாடம்
- அலமேலு மணி|நவம்பர் 2007|
Share:
ராகவனின் மனமெல்லாம் பறந்தது. உள்ளத்தின் உற்சாகம் உடல்முழுவதும் பரவ மெதுவாக உதடு குவித்து விசிலடிக்க ஆரம்பித்தான். பக்கத்தில் இருந்தவர் தன்னைத் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்ததும் சிறிது வெட்கப்பட்டுப்

பாட்டை நிறுத்தினான். 'என்ன தம்பி! ரொம்ப சந்தோஷமா இருக்காப்போல தொரியுதே! உம்... நடத்தும்' என்று சிரித்தபடி ஊக்கினார் அவர். 'இல்லை சார்' என்று இழுத்தவன், 'நான் ராகவன். சென்னயிலிருந்து' என்று

அறிமுகப்படுத்திக் கொண்டான்.

'சந்தோஷம். நான் தியாகேசன். கோவை' என்று கை நீட்டினர்.

'இதுதான் என் முதல் கனடா பயணம். சொல்லப்போனால் விமானத்தில் ஏறுவதே முதல் தடவை. எப்போதுடா போய் தரை மிதிப்போம் என்று பரபரப்பாக இருக்கிறது சார்' என்று உண்மையைச் சொன்னான் ராகவன்.

கடகடவென்று வாய்விட்டுச் சிரித்த தியாகேசன், 'விமானம் 600 மைல் வேகத்தில் பறக்குது. அதைவிட வேகமாக நீங்கள் பறக்கிறீர்களே' என்றவர், 'நானும் கனடா தான். தம்பி மகள் திருமணத்துக்கு வந்துவிட்டுப்

போகிறேன். எதேனும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்' எனத் தன் விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்டினார். வாங்கிப்பார்த்த ராகவன் மகிழ்ச்சியுடன் 'நானும் டொரொண்டொதான் வருகிறேன். நிச்சயம் கூப்பிடுகிறேன்'

என்று கார்டைத் தன் பர்சினுள் திணித்தான். மாரியாதைக்காக வாங்கிக்கொண்டானே தவிர அதற்குத் தேவை இருக்காது என்று அவனுக்குத் தொரியும். தன் தகுதிகளும், உறவினாரின் செல்வாக்கும் போதாதா என்ன!

கடிகாரத்தைப் பார்த்ததும்தான் மணி ஒன்றானது தொரிந்தது. காலை பத்து மணியிலிருந்து டொரொண்டோ ஸ்டார், சன், இன்ன பிற காலைப் பத்திரிகைகளைப் புரட்டி, வந்த எல்லா 'வேலை காலி' விளம்பரங்களுக்கும்

விண்ணப்பம் எழுதி எழுதிக் கை வலித்தது. தலைவலி வேறு. நல்ல வேளை புத்தக லைப்ராரியில் குளிர்சாதனம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்ததால் நேரத்தின் காட்டம் தாக்கவில்லை. மெதுவாக எழுந்து லைப்ராரியின்

அருகிலிருந்த அஞ்சலகத்துக்குச் சென்று எல்லா விண்ணப்பங்களுக்கும் தபால் தலை ஒட்டித் தபால் பெட்டியினுள் தள்ளினான்.

'என்னங்க. இன்னும் எத்தினி நாள் நம்ம வீட்டிலேயே இருப்பாரு உங்க பிரண்ட்?' வீட்டின் உள்ளே நுழையும்போது நண்பனின் மனைவி நாயகி கேட்ட கேள்வி காதில் விழுந்ததும் உள்ளே நுழையாமல் வெளியிலேயே நின்றான்

ராகவன். நியாயம்தானே! வந்து மூன்று மாதமாக நண்பனின் வீட்டில் விருந்தாளியாக இருக்கிறான். நாயகி அண்ணி கேட்டதில் என்ன தவறு? அவனும் தேடாத வேலை இல்லை. போடாத தபாலில்லை. கிடைத்தால்தானே!

இஞ்சினியரிங் படிப்பில் பெற்ற தங்கப் பதக்கத்துக்குக் கனடாவில் பித்தளை மதிப்புகூட இல்லை என்று தொரிந்தபோது மனம் அதிர்ந்தது உண்மை. வேலை செய்த முன்னனுபவம் இல்லை என்பதால் கனடாவில் யாருமே

அவனைச் சீந்தவில்லையே! நண்பனும் சொல்லிப்பார்த்தான். அனுபவம் கிடைப்பதற்காகவாவது எதாவது ஒரு வேலை எடுத்துக் கொள். அதை முதல்படியாக வைத்து மேலே ஏறலாம் என்று; கிடைத்தது என்ன வேலை? ஒரு

கால் சென்டாரில் டெலிபோன் வழியே செய்தித்தாளுக்குச் சந்தா சேகாரிக்கும் வேலைதான் கிடைத்தது. சந்தா கிடைத்தால் தான் சம்பளம் என்பது முதல் வாரம் முடிந்தபின்தான், $10 சம்பளத்தைப் பார்த்தபின்தான்,

புரிந்தது. ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தன் படிப்புக்குரிய வேலை தேடுவதில் இறங்கினான்.

ஆனால்... இன்று நாயகி அண்ணி கேட்ட கேள்வி காதில் விழுந்ததும் எந்த வேலை கிடைத்தாலும் செய்ய முடிவு செய்தான். கையில் உள்ள பணத்தை அம்மாவுக்கு அனுப்புவதா? வீட்டு வாடகையா? சாப்பாடா?

நினைவுகளில் மூழ்கி நின்ற ராகவனை 'ஹாய் ராகவ். உனக்காகத்தான் காத்திருக்கிறேன். வா வா! ஒரு நல்ல செய்தி' என்று கையைப்பிடித்து வீட்டுக்குள் கரகரவென இழுத்துச் சென்றான் நண்பன் 'என் பழைய நண்பன்

வேணுவைச் சந்தித்தேன். அவனுடைய கிளினிக்குக்கு ஒரு ஹெல்ப்பரைத் தேடிக் கொண்டிருக்கிறான். பை தி வே, அவன் ஒரு டாக்டர். ரொம்பச் சொல்லி உனக்கு அந்த வேலையைத் தரச் சொல்லி இருக்கிறேன். நாளையே

அவனைப் போய்ப் பார்' என்றான் உற்சாகமாக.

இந்த வேலை ராகவனுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. ·பைலை எழுத்துவாரியாக அடுக்குவதும், காப்பி போடுவதும், வேலையா இது? இப்படி வேலை பார்ப்பது, அதுவும் இந்த டோரதிக்குக் கீழே வேலை பார்ப்பது,

ஆண்மைக்கு இழுக்கு என்று தோன்றியது... சை! அவளுக்கு ஏதோ ஓரிரண்டு மெடிகல் விஷயம் தொரியும். அவ்வளவுதான். அதை வைத்துக்கொண்டு அவனை எவ்வளவு வேலை ஏவுகிறாள். பல்லைக் கடித்துக் கொண்டு

வேலை செய்தான். ஒருநாள் டாக்டர் வேணு அவனை அழைத்துப் பேசினார். 'மிஸ்டர் ராகவன். நீங்கள் டோரதியுடன் அவ்வளவு நட்புணர்வோடு இல்லை என நினைக்கிறேன். இது மெடிகல் கிளினிக். அடிக்கடி மெடிகல்

·பைலைப் பார்க்கவேண்டும். அவள் ஒருத்தியால் எல்லா வேலையும் செய்ய முடியவில்லை என்றுதான் உங்களை உதவிக்கு எடுத்தோம். அவளைப் பார்த்து வேலைசெய்யக் கற்றுக் கொள்ளுங்கள். குறை சொல்லாதீர்கள்'

என்று கண்டிப்புடன் சொன்னார்.

திகைத்து நின்றான் ராகவன். தனக்குச் சாதகமாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தால் வேலைக்கே உலை வைக்கிறாரே! கோபத்தில் 'உங்கள் வேலையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று ·பைலை அவர் முகத்தில் வீசி

எறிந்து அந்த அறையை விட்டுப் போகலாமா என்று யோசித்தவன், மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு 'சாரி சார். இனிமேல் இன்னும் கடுமையாக முயற்சிக்கிறேன்' என்று கூறிவிட்டு வெளியேறினான். இந்த வேலைச்

சம்பளத்தில் தானே இரவுப் பள்ளிக்குப் போய் தன் எஞ்சினீயர் பட்டத்தைக் கனடாவில் செல்லுபடியாக்கப் படிக்க முடிகிறது.

நாளாக ஆக வேலை பளு அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிரக் குறையவில்லை. டோரதி தன் வேலையையும் அவனுக்குக் கற்றுக்கொடுத்ததில் வேலை அதிகம்தான். சாப்பிடக்கூட நேரமில்லை. அன்றும் அப்படித்தான்

கிளினிக்கில் ரொம்பக் கூட்டம். டோரதி அன்று வரவில்லை. அவள் பாய் ·பிரண்டு எல்.ஏ.யிலிருந்து வந்திருக்கிறானாம். ராகவனுக்கு மூச்சுவிட நேரமில்லை. போன் பார்த்து, நோயாளிகளை கவனித்து, கால்கள் கெஞ்ச

ஆரம்பித்தன. அப்போதுதான் அந்த மூதாட்டி வந்தாள். நன்றாகத்தான் இருந்தாள். திடீரென்று குமட்டிக்கொண்டு வந்து அந்த ரூமிலேயே வாந்தி எடுத்துவிட்டாள். அவசரமாக போனை அழுத்தித் துப்புரவாளரைக் கூப்பிட்டான்

ராகவன். நீண்ட நேரம் அடித்தபின் யாரோ எடுத்து ஜானிடர் அவசர வேலையாக வெளியே போயிருப்பதாகவும் அரைமணி நேரத்தில் வருவார் என்றும் சொன்னார். அதற்குள் சலசலப்பைக் கேட்டு டாக்டர் வேணு விசிட்டர்

அறைக்கு வந்து விட்டார். 'ஜானிடர் அரைமணி கழித்துதான் வருவார்' என்று சொன்னான் ராகவன்.
அந்த மூதாட்டியை அப்படியே தன் இரு கைகளிலும் அணைப்புக் கொடுத்துத் தூக்கித் தன் அறைக்குக் கொண்டுபோக ஆரம்பித்த டாக்டர் வேணு உள்ளே திரும்புமுன் முன் கழுத்தைத் திருப்பி 'மிஸ்டர் ராகவ், இதை தயவு

செய்து துடைத்து விடுகிறீர்களா? வேறு யாரும் வழுக்கி விடக்கூடாது' என்றார். 'நானா!' சிறிது உரக்கவே வந்துவிட்டது ராகவனின் குரல். ஒரு நிமிஷம் நிதானமாக அவனைப் பார்த்த டாக்டர் உடனே திரும்பி உள்ளே சென்று

விட்டார்.

உடம்பெல்லாம் கூசிவிட்டது ராகவனுக்கு. அவன் என்ன ஆயாவா? இதைத் தன்னைச் செய்யச் சொல்ல எத்தனை திமிர் இருக்க வேண்டும் டாக்டர் வேணுவுக்கு? எல்லாம் பணம் செய்யும் வேலை. பென்ஸ் காரும் ஆயிரம்

டாலர் ஆர்மானி சூட்டும் இருந்தால் மற்றவர்களை மட்டமாகத்தான் பார்க்கச் செய்யும். உடம்பெல்லாம் பதற நின்று கொண்டிருந்தான் ராகவன்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு வெளியே வந்த டாக்டரைப் பார்த்த ராகவன் திகைத்து விட்டான். மேல்கோட்டு இல்லை. ஆர்மானி சட்டை இல்லை. பனியனுடன் கையில் ஒரு பக்கெட்டும் தரை துடைக்கும் 'மாப்'புமாக

வெளியே வந்தவர் 'கிருமிகள் பரவும் இல்லையா?' என்று சொல்லிக்கொண்டே துடைக்க ஆரம்பித்தார். டாக்டர் தரையைத் துடைப்பதைக் கண்டதும் அங்கிருந்த சிலர் 'நோ டாக்டர். வீ வில் டூ இட்' என்று ஓடி வந்தார்கள்.

புன்சிரிப்புடன் அவர்களைக் கையமர்த்திய டாக்டர் தானே துடைக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கிருந்த ஒருவர் 'நான் இந்த வேலையை உங்களைவிட நன்றாகச் செய்வேன். நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்' என்று

மாப்பை வாங்கிக்கொண்டு துடைக்க ஆரம்பித்தார். டாக்டரும் அந்த மனிதாரின் வற்புறுத்தலுக்குப் பணிந்து மாப்பை அவாரிடம் கொடுத்து விட்டு 'நெக்ஸ்ட்' என்றபடி உள்ளே சென்றார்.

எல்லா பேஷண்ட்களும் போனபின் டாக்டர் வேணு ராகவனிடம் வந்து நின்றார். 'டாக்டர் சார் வந்து... வந்து' என்று இழுத்தான் ராகவன். 'ராகவ். வாருங்களேன். போய் ஒரு ஐஸ்கி¡£ம் சாப்பிட்டுவிட்டுப் பேசலாம்' என்று

அழைத்துப் போனார். எதிரே இருந்த ஒரு மெக்டானலில் நுழைந்தார்கள். டாக்டர் வேணு 'ராகவ், உங்களுக்குக் கனடா புதிது. அதனால் வேலையின் முக்கியத்துவம் புரியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன் தொரியுமா?'

என்று கேட்டார். 'இங்கேயே படித்தீர்கள் இல்லையா? அப்போதுதானே இவ்வளவு பொரிய டாக்டராக இருக்க முடியும்' என்றான் ராகவன்.

'இல்லை. நான் இந்தியாவில் நாலு வருஷம் பணிபுரிந்த பிறகுதான் இங்கு வந்தேன். இங்கு வந்தபிறகுதான் என் பட்டம் இங்கே செல்லாது என உணர்ந்தேன். இரண்டு வருடங்கள் கல்லூரிப் படிப்பே படிக்க வேண்டியிருந்தது.

கையில் பணமும் இல்லாமல், யார் உதவியும் இல்லாமல் எப்படிப் படிப்பது? எல்லா வேலையும் செய்தேன். கடைசியில் படிப்புக்கும் உதவும்படியாக நல்ல ஆஸ்பத்திரியில் வேலைக்குச் சேர்ந்தேன். இரவெல்லாம் வேலை,

பகலில் கல்லூரி. தூங்க ஒருமணி நேரம்தான்.'

வாயைப் பிளந்துகொண்டு வேணுவைப் பார்த்தான் ராகவ். 'உண்மைதான் ராகவ். நான் என்ன வேலை பார்த்தேன் தொரியுமா? ஆர்டர்லியாக. ஆமாம். நாலு வருடம் டாக்டராகப் பணியாற்றிய நான் இங்கு வந்து ஆர்டர்லியாக

வேலை பார்த்தேன். வந்தாகி விட்டது. திரும்பிப் போக மனம் இடம் தரவில்லை. தரை துடைத்தேன். பேஷண்டை கர்னியில் வைத்து ரூம் ரூமாகக் கொண்டு சேர்த்தேன். ஏன் இறந்தவர்களை மார்ச் சுவாரியில் கொண்டு

விடுவது கூடச் செய்யவேண்டி வந்தது. சிலசமயம் வாந்தியைத் துடைப்பதும், கழிவுகளை எடுத்துக் கொட்டுவதும் கூடச் செய்யவேண்டி வந்தது. இரவெல்லம் வாய்விட்டு அழுதிருக்கேன். என் மனைவி இந்தியாவில்

இருந்தாள். அவள் தான் எனக்குக் கடிதத்தில் ஆறுதல் தருவாள். இப்போதுபோல் போன்கால் அத்தனை சுலபமல்ல. ஒரு நிமிஷத்துக்கு 1.90 கூட ஆகும். என் பணத்தில் அது முடியாது.

'காந்தியே கழிவறை துடைத்தார். அதை நினைத்துக் கொள்ளுங்கள். வேலைதான் தெய்வம். அது எந்த வேலையானாலும் சாரி. காந்தி தந்த பாடம். மறந்து விடாதீர்கள்' என்று சொல்லி ஊக்கம் தருவாள். இங்கு

உழைப்புக்குத்தான் மதிப்பு. டாக்டரும் ஆர்டர்லியும் உணவு நேரத்தில் ஒரே மேசையில் உட்கார்ந்து ஹாஸ்பிடல் உணவறையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வித்தியாசம் கிடையாது. அப்போது நினத்துப் பார்ப்பேன்.

இந்தியாவில் நான் வேலை செய்தபோது எனக்கு மற்றவர்களைப் பற்றித் தொரியாது. நானெப்படி ஆயாக்களையும், ஆர்டர்லியையும் துச்சமாக நடத்தியுள்ளேன் என்று. அந்தக் கொடுமையில்லை இங்கு. இப்படி வேலை

செய்ததால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொண்டேன். செய்யும் தொழிலே தெய்வம் என உணர்ந்தேன்' என்று உணர்ச்சியுடன் கூறினார் வேணு.

பிரமை பிடித்தவன் போல் உட்காந்திருந்தான் ராகவ். 'ராகவ். இந்தியாவிலிருந்து எல்லாரும் தங்கச் சுரங்கம் என்று நினைத்து அமொரிக்காவுக்கும் கனடாவுக்கும் வருகிறார்கள். எந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம், எந்த

ஊரில் என்ன வேலை கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் அந்தப் படிப்புக்கு இங்கே எவ்வளவு மதிப்பு என்று ரிச்ர்ச் செய்வதில்லை. தங்கம் எடுப்பது சுலபமல்ல. சுரங்கத்தில் போய் கல் உடைத்துப்

பிரித்தால்தான் தங்கம் கிடைக்கும். புதிதாக வருபவர்களுக்கும் அதே விதிதான். உழை. உழைத்தால் உயரலாம்' என்றார் வேணு.

பக்கத்தில் தரையைத் துடைத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் இவர்கள் மேஜைக்கு வந்து காபி டம்ளர்களை எடுத்து மேஜை துடைக்க ஆரம்பித்தார். 'ஹை!' என்றார் டாக்டர் வேணு. பதிலுக்கு 'ஹை' என்றவர், 'எனக்காக

இரவு சாப்பிடக் காத்திருக்க வேண்டாம். நான் ராக் கான்சர்ட் போய்விட்டு லேட்டாகத் தான் வருவேன்' என்றார். 'ஓ, எதாவது உதவி...' என்று பர்சை எடுக்கப்போனார் வேணு.

'நோ டாட். ஐ அம் கவர்ட். இரவு பார்க்கலாம் டாட்' என்று கூறிவிட்டு நகர்ந்தார் வாலிபர்.

அலமேலு மணி, கனடா
More

பிறந்த மண்
மறுபடியும் விடியும்
Share: 




© Copyright 2020 Tamilonline