|
செப்டம்பர் 2001 ஜோக்ஸ் |
|
- ஸ்ரீகோண்டு|செப்டம்பர் 2001| |
|
|
|
தோழி 1 : என்னது! யார் எந்த டெசிஷன், எடுக்கறதுங்கற பிரச்சனை. கணவன் மனைவியான உங்க ரெண்டு பேருக்கும் நடுவில வராதா? எப்டி?
தோழி 2 : ஆமாம். எங்க குழந்தையை எந்தப் பள்ளிக்கூடத்துல சேக்கணும். எந்த பாங்குல அக்கவுண்ட் வச்சுக்கணும், மற்றும் 'Stock' மார்க்கெட்ல எந்த 'Shares' வாங்கணும் போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு நான் முடிவு எடுப்பேன்.
மனித கிளோனிங் செய்வது சரியா? தவறா! மற்றும் பிரசிடெண்ட் புஷ்ஷின் வருமான வரி விலக்கு தேவையா இல்லையா? போன்ற முக்கியமான விஷயங்களுக்கெல்லாம் என் கணவரே முடிவெடுத்துருவார்.
*****
கடியோ கடி
நபர் 1 : மின்னல் தாக்கி மயக்கமாயிட்ட குப்புசாமி கொஞ்சம் சிரிச்சுகிட்டே படுத்திருக்கற மாதிரி தெரியலே?
நபர் 2 : அதை ஏன் கேக்கற? மின்னல் அடிக்கறச்சே, தன்னை யாரோ போட்டோ, பிடிக்கறதா நினைச்சுக்கிட்டாராம்.
*****
நபர் 1 : ஏம்பா, என்ன கண்ணாடியப் பார்த்துகிட்டே சாப்பாடு சாப்புடுற?
நபர் 2 : டாக்டர் தான், என்னய, பார்த்து சாப்பிடச் சொல்லியிருக்கறாரில்ல..
***** |
|
ஏர்போர்ட்டில் ஒரு அறிவிப்பு ''ஹியரிங் எய்டு மிஷினைத் தொலைத்துவிட்டதாக அறிவித்த பயணியின் கவனத்திற்கு! உங்களது மிஷின் கிடைத்து விட்டது. எங்களது 'செக்கிங் கவுண்டரில்' வந்து வாங்கிச் செல்லவும்'.
*****
கணவன் : ஆபீசிற்கு லேட்டாச்சு. என்னோட சட்டையக் காணல்லையே? கொஞ்சம் தேடித்தரக்கூடாதா..
மனைவி : நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு, ரெண்டு நாளா, பேசிக்காமயிருக்கோமே! அதை மறந்து போய் என்கிட்ட என்ன கேள்வி?
கணவன் : ரொம் ஒத்து போறதுனாலதான் ரெண்டு நாளா, பேசாமயிருக்கோம்னு நினைச்சிருந்தேன்.
*****
மனைவி : இப்பதான் கொஞ்சம் நேரம் முன்னாடி ஆபீசிற்கு கிளம்பி போனீங்க. அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்க?
கணவன் : வேலை ஒண்ணுமே கிடையாது. எங்க தூங்கினா என்னன்னுதான்.
*****
ஸ்ரீ கோண்டு |
|
|
|
|
|
|
|