Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
தமிழ் புக் - 2000 கணனிக் குறுந்தகடு
- |ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeஒவ்வொரு பெற்றோருக்கும் தன்னுடைய குழந்தைகளுக்குத் தாய்மொழியைப் பற்றி அறிமுகமும், புரிதலும் செய்து வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே அவசியம் ஊடகங்களக்கும் இருக்கிறது. அதன்படியே தென்றல் செயலாற்ற முனைகிறது. ''இளந்தென்றல்'' பகுதி வெறும் மகிழ்வூட்டல் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், குழந்தைகளுக்குத் தாய்மொழியின் பெருமையையும், சிறப்பையும் எடுத்துக்காட்டும் படியாகயிருக்கும்.

*****


தமிழ் புக் - 2000 கணனிக் குறுந்தகடு

பணி நிமித்தமாகவும் பல்வேறு சமூக நிர்ப்பந்தங்களினாலும் அயல்நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தாய் மொழியாம் தமிழை முறையாகப் பயிற்றுவிக்க முடியவில்லையே என ஏங்குவது வாடிக்கை.

அவர்களின் மனக்குறையைத் தீர்க்கும் வகையில் வெளிவந்திருக்கிறது டாக்டர். பெரியண்ணன் குப்புசாமி அவர்களின் 'தமிழ் புக்-2000' கணினிக் குறுந்தகடு. தமிழ் எழுத்துக்களை, சொற்களை மிக எளிதாகக் கற்றுணரும் வண்ணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது தமிழ் புக்-2000.

உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்-மெய்யெழுத்துக்கள், குறில், நெடில், குறிப்பிட்ட எழுத்துக்குரிய சொற்களின் தொகுப்பு என்று படிப்படியாகப் பயில்விப்பது எனக் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்ச் சொற்களின் தெளிவான உச்சரிப்பை விளக்கும் வகையில் பழைய திரைப்படங்களிலிருந்து சில காட்சிகளையும், பாடல்களையும் தொகுத்தளித்திருப்பது குழந்தைகளை நிச்சயம் கவரும்.

குறிப்பாக 'சரஸ்வதி சபதம்' படத்தில் பிறவி ஊமையாக இருந்த சிவாஜி, திடீரெனப் பேச்சு வந்தவுடன் அம்மா..அப்பா... என்று மெதுவாக ஆரம்பித்து ஓசை, ஒலி, சப்தம், நாதம், எழுத்து, சொல், பொருள், இசை, பண், பாட்டு, கவி, கவிதை, செய்யுள், அறம், பொருள், இன்பம் என்று மடை திறந்த வெள்ளமென உச்சரித்து 'அகர முதல எழுத்தெல்லாம்' பாடலைப் பாடும் காட்சி சரியான தேர்வு.

எண், விலங்கு, மலர், பறவை, பருவ காலங்கள், இயற்கை, நிறம், பழம், வடிவம், மனித உடல் உறுப்புகள், உணவு என்ற பிரிவுகளில் தமிழ்ச் சொற்களைத் தொகுத்திருப்பது பாராட்டத்தக்கது.

குழந்தைகளை வெகுவாய்க் கவரும் 'மாம்பழ மாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்' போன்ற பாடல்கள், கடவுள் வாழ்த்து, திருக்குறள் அறிமுகம் எனப் பல சுவையான பகுதிகள்.

சிறுவர்களின் கற்கும் ஆர்வத்தினைத் தூண்டும் விதமாக ஒலிப்புதிர், எழுத்துப்புதிர், சொல் புதிர், சொல் விளையாட்டு என்று பலவிதத் தேர்வுகளை வைத்து அவற்றுக்கு மதிப்பெண்களை வழங்குவதும் சிறப்பு.

புதிர்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தால் ஒரு 'பென்சில்' உருவம் மகிழ்ச்சியில் கூத்தாடுவதும், தவறான விடையைத் தேர்ந்தெடுத்தால் தலைகீழாய் நின்று தவிப்பதும் குழந்தைகளை நிச்சயம் கவரும். இத்தொகுப்பில் அடங்கியுள்ள 1551 சொற்களையும் தேடிப்பிடிக்கும் வசதி சரியாகப் பொருத்துக. சரியான படங்களைத் தேர்வு செய்க போன்ற பகுதிகளும் சுவையானவை.
Click Here Enlargeஎழுத்துக்களை கணனியிலேயே எழுதிப் பழகும் உத்தி, எழுதும் முறை, எழுதியதைப் பாதுகாக்க படிவம் எடுக்க, எழுத்துக்களின் வண்ணங்களை மாற்ற, அளவைக் கூட்ட (அ) குறைக்க என்று தமிழ் மொழி பயில மிக எளிதானதாகவும் ஈர்ப்புடையதாகவும் அமைத்திருக்கின்றனர்.

தமிழ் மொழியைக் கணனி மூலம் கற்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய வாய்ப்பினை இந்தக் குறுந்தகட்டுத் தொகுப்பு நமக்கு வழங்கியிருக்கிறது என்ற வகையில் மிகச் சிறப்பானதோர் முயற்சி இது என்று உறுதியாகச் சொல்லலாம்.

புத்தகப் பொதி சுமக்கும் மழலை மலர்களின் வேதனை தீர்க்க, இது போன்ற முயற்சிகளுக்கு நாம் அளிக்கும் ஆதரவு பெரிதும் உதவும்.

'Tamil Book-2007' கணனிக் குறுந்தகட்டினைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

Periannan Kuppusamy, PhD.
2910, Brightwater Lane,
Abingdon, MD 21009. USA.
Ph : 1-410-515-3611
Fax : 1-410-569-7277
email :kuppu@kalvi.com
Share: 




© Copyright 2020 Tamilonline