கொழுக்கட்டை தேங்காய்ப் பூரணம் கடலைப் பருப்பு பூரணம் எள் பூரணம் உளுந்துப் பூரணம் - காரம் பால் கொழுக்கட்டை (அல்லது) பாகு கொழுக்கட்டை மைதா மாவு முறுக்கு
|
|
|
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம் சர்க்கரை - 400 கிராம் நெய் - 150 கிராம் முந்திரிப் பருப்பு - 25 கிராம் ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிதளவு கேசரிப் பவுடர் - சிறிதளவு பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
செய்முறை :
மைதாவில் 1 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கலக்கி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
முந்திரியை துண்டுகளாக ஒடித்து நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மாவைக் கையால் நன்கு பிசைந்து பால் வரும்படி செய்து சல்லடையை வைத்து வடிகட்டிப் பால் எடுக்கவும்.
வாணலியில் சர்க்கரையுடன் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் மைதா மாவில் எடுத்த பாலை விட்டுக் கிளறவும்.
குங்குமப்பூ, கேசரிப்பவுடர், பச்சைக் கற்பூர்ம் இவைகளைக் கரைத்து விட்டுக் கிளறி இறுதி வரும் சமயத்தில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.
அல்லா சட்டியில் ஒட்டாமல் பந்து போல் சுருண்டு நெய்யைக் கக்கி வரும் சமயம் இறக்கி ஏலப்பொடி, முந்திரிப் பருப்பு இவைகளைக் கலந்து நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பித் துண்டுகள் செய்யவும். |
|
நளாயினி |
|
|
More
கொழுக்கட்டை தேங்காய்ப் பூரணம் கடலைப் பருப்பு பூரணம் எள் பூரணம் உளுந்துப் பூரணம் - காரம் பால் கொழுக்கட்டை (அல்லது) பாகு கொழுக்கட்டை மைதா மாவு முறுக்கு
|
|
|
|
|
|
|