இயல் விருது தமிழுக்கென முயலுனர்: ஜார்ஜ் ஹார்ட் இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன் இயல் விருது தமிழுக்கென முயலுனர்: க்ரியா எஸ்.ராமகிருஷ்னன் தமிழ் பெண்ணின் வாழ்க்கை பற்றி போ பிரான்சன் அட்லாண்டா தமிழ்க் கல்வி மையம் - பட்டமளிப்பு விழா - ஒரு கண்ணோட்டம் தெற்காசியப் பத்திரிகையாளர்கள் மாநாடு சென்னையில் ராஜாரவிவர்மாவின் கண்காட்சி அனு நடராஜனின் பிரிமாண்ட் நகர குழுவிற்கான தேர்தல் பிரசாரம்
|
|
சக்தி தொலைக்காட்சி |
|
- |ஜூலை 2006| |
|
|
|
செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல், வாரம்தோறும் காலை 9 மணிக்கு சக்தி தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
இந்நிகழ்ச்சியில், விரிகுடாப் பகுதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், இங்குள்ள மெல்லிசைக் குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சிகள், விரிகுடாப் பகுதி தமிழ் மக்களின் வாழ்க்கையை, கலை, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளை வெளிக் கொண்டுவரும் விதமாக, இங்கேயே எழுதித் தயாரிக்கப் பட்ட தொலைகாட்சி நாடகத் தொடர்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை இடம் பெறும்.
விரிகுடாப் பகுதி எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், இயக்குனருமான திருமதி. பாகீரதி சேஷப்பன் இத்தொலைக் காட்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். மெல்லிசை மற்றும் கிராமிய இசையில் புகழ் பெற்ற திரு ஸ்ரீதரன் மைனர் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணிபுரிகிறார். மேலும் பற்பல புகழ் பெற்ற கலைஞர்களும், நடிகர்களும் பங்கு பெறுகிறார்கள்.
விரிகுடாப் பகுதியில் முதன் முறையாக, முழு நீள தொலைகாட்சி நாடகத் தொடர் உருவாகி வருகிறது. “வேலைக்கு வணக்கம்” என்ற இந்நாடகம் முழுக்க முழுக்க இங்கு எழுதப்பட்டு, இங்குள்ள நடிகர்களின் உதவியுடன் உருவாகிறது. தமிழ் மன்றத்தில் சொந்த நாடகங்களை எழுதி, இயக்கி வந்த திருமதி பாகீரதி சேஷப்பன், இந்நகைச்சுவை நாடகத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். |
|
தமிழ் மன்றம், ராகாலயா இன்னிசைக் குழு, தில்லானா இன்னிசைக் குழு, ஸ்ருதி ஸ்வரலயா, Mostly Tamil மற்றும் பல விரிகுடாப் பகுதி இயக்கங்களின் அன்பு ஆதரவுடன் சக்தி தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு: www.saktitv.com நிகழ்ச்சிகளில் பங்கு பெற: president@saktitv.com |
|
|
More