தனிமை - தமிழ்நாடகம் ஒரு பார்வை பாரதி கலாலயா நிகழ்ச்சிகள் அக்கினிக் குஞ்சு - மகாகவி பாரதி பற்றிய வரலாற்று நாடகம் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ்மன்றம், கலி·போர்னியா தமிழ் கழகம் - மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஹூஸ்டன் பெருநகரின் முன்னாள், நிதியமைச்சர் ப. சிதம்பரம்! கலி·போர்னியா தமிழ்க்கழகம் மூன்றாவது ஆண்டு விழா SIFA நடத்திய ஸ்ரீதுக்காராம் கச்சேரி!
|
|
|
சுவாமி விவேகானந்தர் இதே அமெரிக்காவில் 1893ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொரிவில் நம் இந்திய நாட்டு கலாச்சாரம் உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்று சொன்னார். அவர் இன்று இருந்தால் அதே அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் நம் நாடடு யோகக் கலை, தியானம், பரதம் போன்றவைகள் போற்றப்படுவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார். இப்போது அமெரிக்காவில் மூலைமுடுக்குகளில் எல்லாம் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சமீபத்தில், மே மாதம் 31ஆம் தேதி மிசிகன் மாகாணத்தின் ஒரு பகுதியான சின்னஞ்சிறிய ஊரான பாட்டில் கிரீக் (Battle Creek)ல் இரண்டு வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள ஆறு மாணவிகள் அருமையான கலைநிகழ்ச்சிகளை அறித்தனர்.
லேக் வியூ (Lake View) பள்ளியின் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமாச்சாரியாரின் பல கீர்த்தனைகளுக்கு மாணவிகள் நந்திதா, அஞ்சனா, ஸ்வாதி அழகாக அபிநயம் பிடித்தனர். ஜெயதேவரின் அஷ்டபதிக்கு குமாரி நந்திதா அருமையாக அபிநயம் செய்து எல்லாருடைய பாராட்டையும் பெற்றார். அன்னமாச்சாரியாரின் தசாவதார கீர்த்தனை குச்சுபுடி பாணியில் அமைந்து, அரங்கத்தில் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தியது. கிராமியப் பாடலுக்கும் இந்த விழாவில் நாட்டியம் ஆடினார்கள். இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள நான்கு குழந்தைகள் லம்பாடி பாடலுக்கு ஏற்றபடி ஆடி, அரங்கத்தில் உள்ளோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். |
|
பாட்டில் க்ரீக் (Battle creek)கின் பிரபல டாக்டர் பத்ரிநாத் அவர்களின் மனைவி ஆர்த்தி பந்தநல்லூர் பாணியில் பரதம் ஆடினார். குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சிறப்பு விருந்தினருக்கான சிறப்பு நடனம் என்கிற முறையில் மேடையில் தோன்றி நடனம் ஆடினார். இவரே நிகழ்ச்சியின் விவரங்களைத் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை, நடனமாடின குழந்தைகளின் தாய்மார்கள் ஒன்று கூடி நடத்தினார்கள். இதில் தீபிகா, மற்றும் லக்ஷ்மி இருவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. மாணவி அஞ்சனாவின் தாய் கீதா அவர்கள்தான் நடனமாடிய அத்தனை மாணவிகளுக்கும் குரு.
விமலா வாசுதேவராவ் |
|
|
More
தனிமை - தமிழ்நாடகம் ஒரு பார்வை பாரதி கலாலயா நிகழ்ச்சிகள் அக்கினிக் குஞ்சு - மகாகவி பாரதி பற்றிய வரலாற்று நாடகம் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ்மன்றம், கலி·போர்னியா தமிழ் கழகம் - மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஹூஸ்டன் பெருநகரின் முன்னாள், நிதியமைச்சர் ப. சிதம்பரம்! கலி·போர்னியா தமிழ்க்கழகம் மூன்றாவது ஆண்டு விழா SIFA நடத்திய ஸ்ரீதுக்காராம் கச்சேரி!
|
|
|
|
|
|
|