|
மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது |
|
- |ஜூலை 2003| |
|
|
|
கூட்டணி -1
வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆதரவின்றி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. இதுதான் வருங்காலத்தில் தேசிய அரசியலில் அ.தி.மு.க.வின் பங்காக இருக்கும்.
பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் இருந்து நாங்கள் நமதூரத்தில் இருக்கிறோம். சோனியா காந்தியை அடுத்த பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியினர் முன்னிறுத்தினால் அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள எங்களுக்கு ஆர்வமில்லை. இந்த மகத்தான நாட்டில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி பிரதமராவதை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
ஜெ.ஜெயலலிதா, தமிழக முதல்வர், அ.தி.மு.க. தலைவர், பத்திரிகையாளர் சந்திப்பில் (13 ஜுன் 03)
**** கூட்டணி -2
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க இருக்கும் போது பா.ஜ.கவினர் வேறு யாரையும் பாராட்டியோ புகழ்ந்தோ பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்துக் கொண்டு நாங்கள் கூட்டணியில் இல்லை.
கொள்கை மாறுபாடுகள் வந்தாலோ கூட்டணிச் செயல்திட்டத்துக்கு விரோதமான காரியங்கள் நடந்தாலோ தேசிய ஜனயாயகக் கூட்டணியில் நீடிப்பது பற்றி தி.மு.க. யோசிக்கும்.
'மக்களவைத் தேர்தலுக்குப்பின் அ.தி.மு.கவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இவ்விஷயத்தில் என்னைவிட பிரதமர் வாஜ்பாய்க்கு நல் அனுபவம் உண்டு.
மு. கருணாநிதி,தி.மு.க. தலைவர். நிருபர்களிடம் 15.06.03 அன்று
**** தேர்தல் ஆணையம்
மொழி, சமயம், சாதி அடிப்படையில், சாதி ஒழிப்பு அடிப்படையில் என பல வகைப்பட்ட கட்சிகள் தோன்றுகின்றன, மறைகின்றன, நிலைக்கின்றன.
தேர்தல் கால கட்சிகளாக சில முளைத்து, தேர்தல் முடிந்தவுடன் முடிந்து போகிற கட்சிகளும் நம் நாட்டில் உண்டு. இந்தக் கட்சிகள் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? என கடந்த 50 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக 1990களின் கடைசி ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையாளராக டி.என்.சேஷன் பொறுப்புக்கு வந்த பிறகுதான் நாட்டின் பாமர மனிதராலும் அறிந்து கொள்ளத்தக்க அமைப்பாக, விமர்சனத்திற்குரிய அமைப்பாக தேர்தல் வெளிப்பட்டது.
அரங்க குணசேகரன், தலித்சிந்தனையாளர், செயற்பாட்டாளர், 'புதியகோடாங்கி' ஜுன் இதழில்....
**** |
|
கலைஞன்
சினிமாவுக்குள் நுழைவுச்சீட்டு வாங்கவே பாதி ஆயுள் போய்விடும். அதிலும் ஒரு டைரக்டராவது அவ்வளவு சுலபமல்ல.
ஒரு நடிகரை, தயாரிப்பாளரை திருப்திப்படுத்த வேண்டும். 1997ல் இயக்குநர் பாலாவுக்கு உதவியாளராகச் சேர்ந்து 'சேது' படம் பண்ணினேன். பிறகு 'நந்தா' படத்திற்கும் உதவி இயக்குநராக வேலை செய்தேன். ஆனால் அங்குள்ள உள்அரசியல் காரணமாக நான் விரட்டியடிக்கப்பட்டேன். 'நந்தா' படத்தில் நான் வேலை பார்த்தற்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு என் பெயர்கூட மறைக்கப்பட்டது.
அமீர் என்ற பெயர் இருப்பதால் சினிமா துறைக்குள் இப்போதே ஓரங்கப்பட்டப்படுகிறேன். நான் இயக்கிய 'மெளனம் பேசியேத' படத்தின் தயாரிப்பாளர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவரிடம் போய் 'ஒரு துலுக்கனை வச்சு படம் எடுக்கறியே?' என்று கேட்ட மதவாதிகள், தயாரிப்பாளர்கள் இந்த கோடம்பாக்கத்தில் உண்டு. அதைக் கடந்துதான நான் நிற்கிறேன். நான் மக்களிடம் செல்வதற்காகத் தேர்ந்தெடுத்த வழி சினிமா. என்னைக் கலைஞனாகப் பார்க்காமல் ஒரு மதத்தைச் சார்ந்தவனாகப் பார்க்கிறார்கள். ஏன் இந்த இழிநிலை என்று தெரியவில்லை.
அமீர், 'மெளனம் பேசியதே' திரைப்பட இயக்குநர் - 'புதிய காற்று' பேட்டியில்.....
**** இவர்கள் கண்ணுக்கு
ஊடகங்கள் கிராமத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஊடகங்களை நிர்வகிக்கின்றவர்களின் சுயநலன்கள் இதற்குக் காரணம்.
சென்ற ஆண்டு இந்திய கிராமங்களின் நிலைமை மிகமிக மோசமாக இருந்தது. வறட்சியின் காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
முதன்மை நாளேடுகள் எதுவுமே இது குறித்து செய்தி சேகரிக்க, முழு நேர செய்தியாளர்களை அனுப்பவில்லை. 'லக்மே இந்தியா பேஷன் கீக்' என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரிக்க 412 முழுநேர செய்தியாளர்களை,அரசு அங்கீகாரம் பெற்ற நிருபர்களை அனுப்பி வைத்தார்கள்.
ஊடகங்களை நிர்வகிப்பவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதையே இது காட்டுகின்றது.
பி. சாய்நாத், புகழ்பெற்ற பத்திரிகையாளர் 'சமரசம்' இதழில்.... |
|
|
|
|
|
|
|