இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Associations) சார்பாக ·ப்ரீமான்ட்டில் நடந்த இந்த ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தில், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் (Bay Area Tamil Manram) பங்குகொண்டது. விழாவின் ஒரு பகுதியான சுதந்திர தினப் பேரணியில் தமிழ் மன்றம் ஓர் அலங்கார ஊர்தியைப் பங்கு பெற வைத்தது. அந்த அலங்கார ஊர்தி பொங்கல் திருநாளை காட்சியாகக் கொண்டிருந்தது. குடிசை, சேவல், மாக்கோலம், மண் அடுப்பு, அடுப்பின் மேல் பொங்கல் பானை, கரும்பு, பசுமாடு, கன்றுக்குட்டி, வேலியுடன் கூடிய சிறிய நெல் வயல் என்று ஒரு சிறிய கிராமத்தையே அந்த ஊர்தி தாங்கியிருந்தது. ஊர்தியின் மேல் பெண் குழந்தைகள் அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தனர். ஊர்தியின் முன்னே கரகாட்டம், காவடி, கோலாட்டம் ஆகிய நடனங்களை ஆடியபடி சென்றனர். கிராமியப் பாடல்களும், அறுவடைத் திருநாள் பற்றிய பாடல்களும் ஒலிபெருக்கி வழியே இசைக்கப் பட்டன.
தமிழ் மன்றத் துணைத் தலைவர் ராம் அவர்களின் மேற்பார்வையில் செந்தில், கிருத்திகா செந்தில், தேவகி ராம், பாரதி ராம், பரத் ராம்,சௌம்யா ஸ்ரீனிவாசன், ஷர்மிலா, காவ்யா ஆகியோர் கொண்ட குழு இந்த ஊர்தியை உருவாக்கி இருந்தது. குழந்தைகள் சரண்யா, கீர்த்தி, அமொ¢யா, ஷ்ருதி, ஸ்வேதா, ப்ரவீன், அக்ஷய், கார்த்திக், ஜொ¢ஸ், சுமதி, அம்லு ஆகியோர் ஊர்தியிலும் அதன் முன்னும் நடனமாடிச் சென்றனர். இந்த ஊர்தி மூன்றாவது சிறந்த ஊர்தியாகப் பா¢சு பெற்றது. |