இந்தியத் திருவிழா சிவன் என்னும் ஆடலரசன் பிரபஞ்சன் பேசுகிறார்
|
|
தமிழ் நாடகம் 'மாயா' |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
'மாயா' - நாடகப் பெயர் மிகவும் பரிச்சயமானதாக இருக்கிறதல்லவா?
மார்ச், ஏப்ரல் மாதத் தென்றல் இதழ்களில் முன்னோட்டமாகவும் விமரிசனமாகவும் வந்த அதே 'மாயா' நாடகம்தான். இப்பொழுது சாக்ரமென்ட்டோவில் மீண்டும் மேடையேறப் போகிறது.
ஆகஸ்ட் 21ம் தேதி நாட்டோமாஸ் உயர்நிலைப்பள்ளி திரையரங்கில் 'மாயா' நாடகத்தை 'SACTAMILMOVIE' யும், 'VIBHA'வும் (பழைய CRY) இணைந்து மேடையேற்றப் போகிறார்கள்.
'மாயா' வித்தியாசமான கருவாலும், சாணக்யாவின் எழுத்தாலும், நடித்தவர்கள் அனைவரும் கதாபாத்திரமாகவே மாறி விட்டதாலும், வளைகுடாப் பகுதியில் முதன்முதலாக மேடையேறியபொழுதே பாராட்டுதல்களையும், பலத்த வரவேற்பையும் பெற்றுவிட்ட கவிதை போன்ற ஒரு தமிழ்நாடகம்.
புகழ்பெற்ற பல தமிழ் நாடகங்களை மேடையேற்றிய பாம்பே சாணக்யா இந்நாடகத்தை எழுதியவர். 'தனிமை' நாடகத்தை இயக்கிய தீபா ராமானுஜம் இதை இயக்கி, மாயாவாக நடித்துள்ளார். அரங்க வடிவமைப்பு மிகமுக்கியமான விஷயம். வளைகுடாப் பகுதியில் அரங்கேறியபோது காட்சியமைப்பு பிரமாதமாக பேசப்பட்டது. தவறவிடாதீர்கள்.
இந்நாடகத்துடன் அன்று குழந்தைகளுக்காக ஒரு மாறுவேடப் போட்டியும் நடைபெற உள்ளது. |
|
தேதி : ஆகஸ்ட் 21, 2004 நாள் - சனிக்கிழமை நேரம் - மாலை 5 மணி இடம் - நாட்டோமாஸ் உயர்நிலைப்பள்ளி திரையரங்கம், 3301 ·பாங் ரான்ச் சாலை, சாக்ரமென்டோ, கலி. 95833 தொடர்பு கொள்ள : ஜெயந்தி ஸ்ரீதர் : 916.608.9533 முருகேஷ்: 916.705.5569 தினகரன் : 916.984.3177 |
|
|
More
இந்தியத் திருவிழா சிவன் என்னும் ஆடலரசன் பிரபஞ்சன் பேசுகிறார்
|
|
|
|
|
|
|