| சிவன் என்னும் ஆடலரசன் பிரபஞ்சன் பேசுகிறார்
 தமிழ் நாடகம் 'மாயா'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இந்தியத் திருவிழா |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'லாஸ்யா நடனக் குழும'த்தில் நடனம் பயின்று அரங்கேற்றம் கண்ட மூன்று இளம் நடனக் கலைஞர்கள் ஆகஸ்டு 7, 2004, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்தியத் திருவிழா (Festival of India) என்ற நடன நிகழ்ச்சியை வழங்க இருக்கின்றனர். சான்டா கிளாராவின் லூயிஸ் பி. மேயர் அரங்கில் இது நடைபெறும். இதை வழங்கும் மாதவி செருவு, நந்திதா ஸ்ரீராம் மற்றும் அனுராதா சிவராம் சங்கரா கண் மருத்துவமனையின் கண்பார்வை மீட்பு அறுவை சிகிச்சைக்குச் சுமார் $9000 நிதியை இதன் மூலம் திரட்டத் திட்டமிட்டுள்ளனர். இத்தொகை 300 பேருக்குப் பார்வை வழங்கும். 
 விரிகுடாப் பகுதியின் பிரபல நடனக் கலைஞரும், 'லாஸ்யா'வின் இயக்குனருமான வித்யா சுப்ரமணியனின் இயக்கத்தில் நிகழ்ச்சி உருவாகி வருகின்றது. தீபாவளி, பொங்கல், நவராத்திரி, தசரா, துர்காபூஜை, கணேச சதுர்த்தி, திருவோணம் போன்ற பிரபலமான பண்டிகைகளைப் பற்றி நடனங்கள் அமைந்துள்ளன. நிகழ்ச்சியில் முத்துஸ்வாமி தீக்ஷ¢தர், ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, பாபநாசம் சிவன், அம்புஜம் கிருஷ்ணா போன்ற பல இசைமேதைகளின் பாடல்கள் தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், மராத்தி என்று வெவ்வேறு மொழிகளில் இடம்பெறுமூ. நடனங்களும் பல்வேறு இந்திய பாணியில் உருவாகியுள்ளன. உதாரணமாக துர்காபூஜை, ராமலீலா, நடனங்கள் வடஇந்தியப் பழக்கங்களைப் பிரதிபலித்தும், திருவோணம் பற்றிய நடனம் கைகொட்டிக் 'களி' எனும் கேரள நடன பாணியிலும் இடம் பெறும். தில்லானாவிற்கான நடன அமைப்பை இளம் நடனக்கலைஞர்களே உருவாக்கியுள்ளனர்.
 
 நீங்கள் வழங்கும் நிதி கண்பார்வை வழங்குதல் என்னும் நற்பணிக்கு உதவப் போகிறது என்பதில் மனநிறைவு அடையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்தியப் பண்டிகைகளின் அழகையும் சிறப்பையும் நாட்டியம் மூலம் அறிமுகப்படுத்துங்கள்.
 | 
											
												|  | 
											
											
												| மேல் விவரங்களுக்கு :www.lasya.org தொலைபேசி எண்கள் :
 பிரேமா ஸ்ரீராம்  : 408.997.6375
 விஜயா செருவு  : 408.253.8642
 சித்ரா ஸ்ரீராம்    : 408.865.1797
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிவன் என்னும் ஆடலரசன்
 பிரபஞ்சன் பேசுகிறார்
 தமிழ் நாடகம் 'மாயா'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |