சீனாவில் தென்னிந்தியத் திரைப்பட விழா கெளரவ வேடத்தில் பாக்யராஜ் நீதிபதி உருவாக்கும் குறும்படம் இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்! உதயராஜின் நடிப்பும், படிப்பும்....
|
|
புதிய பெண் இசையமைப்பாளர் |
|
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2004| |
|
|
|
தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் ஒரு பெண் இசையமைப்பாளர். ரைஹானா. ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கேராஸில் பாடிய அனுபவமும் இவருக்கு உண்டு.
'அருள்' ரெக்கார்டிங் நிறுவனத்துடன் இணைந்து ஆல்பம் ஒன்றைச் செய்துள்ள ரைஹானாவின் இந்த ஆல்பத்தைக் கேட்ட உதவி இயக்குநர் ஒருவர் மூலம் 'நினைவே' என்னும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள். பாடல்கள் பதிவு முடிந்து படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. அடுத்து 'மச்சி' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. |
|
'மச்சி'யிலும் ஆறுபாடல்கள். இவரது இசையில் 3புதிய குரல்கள் அறிமுகம் என்பது சிறப்பம்சம். 'மச்சி' படத்தின் மூலம் இந்த இளம்பெண் இசையமைப்பாளர் கானா உலகநாதன், சம்சுதீன், ஸ்ரீவித்யா என்று மூன்று புதிய குரல்களைத் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்கிறார்.
ரைஹானா வேறு யாருமில்லை...... பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் உடன் பிறந்த சகோதரிதான்!
தொகுப்பு :கேடிஸ்ரீ |
|
|
More
சீனாவில் தென்னிந்தியத் திரைப்பட விழா கெளரவ வேடத்தில் பாக்யராஜ் நீதிபதி உருவாக்கும் குறும்படம் இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்! உதயராஜின் நடிப்பும், படிப்பும்....
|
|
|
|
|
|
|