சீனாவில் தென்னிந்தியத் திரைப்பட விழா கெளரவ வேடத்தில் பாக்யராஜ் நீதிபதி உருவாக்கும் குறும்படம் இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்! புதிய பெண் இசையமைப்பாளர்
|
|
உதயராஜின் நடிப்பும், படிப்பும்.... |
|
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2004| |
|
|
|
குறும்படங்கள் எடுப்பவர்கள் தேடிப்பிடிக்கும் நாயகன் சிறுவன் உதயராஜ். ஒன்பது வயதில் தேசிய விருது வாங்கிய இந்தச் சிறுவன் சினிமாவிலும் வெளுத்துக் கட்டுகிறான். 'நடிப்பு எனக்கு யதார்த்தமாக வந்து விடுகிறது' என்கிறான்.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை, 12 பி, காசி, சிட்டிசன், திருடா திருடி, திருமலை என்று இவன் நடித்த படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது நடிக்கும் படம் 'ஆயுதம்'.
'நிலாக்காலம்' படத்திற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை வாங்கிய உதயராஜூக்கு அப்போது வயது ஒன்பது. இவனுக்கு விருது வழங்கிய அனில்கபூர், லதா மங்கேஷ்கர் இருவரும் தன்னை ரொம்பவும் பாராட்டினதை இன்றும் பெருமையாகச் சொல்கிறான் 6-வது படித்துக் கொண்டிருக்கும் உதயராஜ். |
|
படப்படிப்புக்குப் போகும்போது தன்னுடன் பாடப் புத்தகங்களை எடுத்து செல்லும் உதயராஜ், இடைவேளைகளில் படிக்கிறான். "சினிமாவில் நடிக்க ஆசை. அதற்காக படிப்பை விடமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்கிறான் உதயராஜ்.
தொகுப்பு :கேடிஸ்ரீ |
|
|
More
சீனாவில் தென்னிந்தியத் திரைப்பட விழா கெளரவ வேடத்தில் பாக்யராஜ் நீதிபதி உருவாக்கும் குறும்படம் இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்! புதிய பெண் இசையமைப்பாளர்
|
|
|
|
|
|
|