சீனாவில் தென்னிந்தியத் திரைப்பட விழா கெளரவ வேடத்தில் பாக்யராஜ் இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்! உதயராஜின் நடிப்பும், படிப்பும்.... புதிய பெண் இசையமைப்பாளர்
|
|
நீதிபதி உருவாக்கும் குறும்படம் |
|
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2004| |
|
|
|
'மக்கள் கோர்ட்டு' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு சட்டப்பணி ஆணையக் குழு தொலைக்காட்சிப் படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறது. இதற்கான கதையைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி உருவாக்குகிறார்.
'லோக் அதாலத்' எனப்படும் மக்கள் மன்றம் மூலம் சுலபமாகவும், குறைந்த கால அவகாசத்திலும் மக்கள் தங்கள் வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியதில்லை. நீதிமன்றக் கட்டணம் இல்லை. ஒரே நாளில் வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து பயன் பெறலாம். |
|
மக்கள் நீதிமன்றத்தின் மூலம் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி உடனே தீர்வு காணமுடிகிறது. இவ்வளவு சுலபமான வழிமுறைகள் உள்ளன என்பதை மக்களுக்குப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் பரப்ப வேண்டும் என்கிற நோக்கத்திற்காக இந்தக் குறும்படம் தயாரிக்கப்படவிருக்கிறது.
தொகுப்பு :கேடிஸ்ரீ |
|
|
More
சீனாவில் தென்னிந்தியத் திரைப்பட விழா கெளரவ வேடத்தில் பாக்யராஜ் இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்! உதயராஜின் நடிப்பும், படிப்பும்.... புதிய பெண் இசையமைப்பாளர்
|
|
|
|
|
|
|