|
கதிர் அண்ணாமலை |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
சாரடோகாவின் (கலி.) மொன்டா விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மேல்நிலை மாணவராகப் போகிறார் கதிர் அண்ணாமலை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர் 4.0 நிலையைத் தவறாது பள்ளி வகுப்புகளில் தக்கவைத்துக் கொள்கிறார். இவரது ஆர்வம் வணிகம், அறிவியல் மற்றும் கணிதத்திலாகும். சொற்பொழிவு மற்றும் வாதிடல் மன்றம், ஆக்டகன் சேவைக் கழகம் இவற்றில் உறுப்பினர். சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் இளைஞரணித் தலைவர். 'அமெரிக்காவின் எதிர்கால வணிகத் தலைவர்' அமைப்பின் அலுவலர். மாணவர் சாரணப் படையில் பதினான்காம் வயதிலேயே 'பருந்துச் சாரணர்' தகுதியை எட்டிவிட்டார். NASA Ames Research Center-இல் நேனோ டெக்னாலஜி (கதிரவன் எழில்மன்னன் தொடரை விடாமல் படித்திருந்தால் உங்களுக்கு இது சட்டென்று புரியும்) குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். |
|
வணிகம் மற்றும் பொறியலில் மேற்படிப்பைத் தொடரத் திட்டமிருக்கும் கதிரை மேலும் பலவற்றைச் சாதிக்க "தென்றல்" வாழ்த்துகிறது. |
|
|
|
|
|
|
|