கின்னஸ் சாதனைக்கு ஒரு பட்டுப் புடவை நிவாரண நிதி
|
|
|
(·பாரன்ஹைட் 9/11 பட இயக்குநர்) மைக்கேல் மூல் ஐரோப்பியக் கூட்டங்களில் அமெரிக்கர்களை மட்டந்தட்டி என்ன பேசியிருக்கக்கூடும் என்பது கேள்வியல்ல. நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டிருப்பது தெரிந்த பின்னர், அதிபர் புஷ் ஒரு ஏழு நிமிடம் குழந்தைகளுக்கு "என்னருமைச் செம்மறியாடு" படித்துக் கொண்டிருந்ததது ஏன் என்பதுதான் கேள்வி.
ஆசிரியருக்கு கடிதம், நியூயார்க் டைம்ஸ்
*****
வாஷிங்டனில் அடிதடி! - துணை அதிபர் டிக் சேனி செனட்டில் கெட்ட வார்த்தை பேசியது குறித்து வாஷிங்டன் போஸ்ட்
1902ல் இரண்டு தென் கரோலைனா செனட்டர்கள் கைகலப்புக்காகக் கண்டிக்கப்பட்டார்கள். இளைய செனட்டர் ஜான் மெக்லாரின் மூத்த செனட்டர் பென் டில்மன் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் அப்பட்டமாகப் புளுகினார் என்ஞறு குற்றம் சாட்டினார். உடனே மூத்தவர் இளையவரின் தாடையில் விட்டாரே ஒரு குத்து. உடனே செனட்டில் நடந்த கைகலப்பு இன்று பேஸ்பாலில் இரண்டு அணிகளும் கைகலப்பதற்குச் சமமாகும். அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேசச்சூசெட்ஸ் செனட்டர் ஒருவரை அவர் நினைவிழக்கும் வரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதற்கு மூன்று நாள் முன்னாள் அடிமைத்தனத்தை எதிர்த்து அவர் பேசிய போது இரண்டு ஜனநாயகக் கட்சி செனட்டர்களைக் குற்றம் சாட்டினார். "யோவ், நீ பிடித்திருக்கும் காமக்கிழத்தி, உனக்கு மட்டும் அழகு, உண்மையிலேயே அசிங்கம்; உனக்கு அவள் கற்புக்கரசி, உலகுக்கு அவள் பொது மகள்; ஆமாம், அடிமைத்தனம் என்ற காமக்கிழத்தியைத்தான் நீ கட்டிப்பிடித்திருக்கிறாய்" என்றார் அவர். அந்த செனட்டரின் மக்களவை நண்பர் ஒரு கொம்பை எடுத்து வந்து அவர் தலையை ஓங்கி அடிக்க, மயங்கி விழுந்த செனட்டரை ரததம் கொட்டக் கொட்ட செனட்டிலிருந்து எடுத்துப் போனார்கள்.
*****
குடியுரிமை இல்லாமலேயே வாக்களிக்கலாம்!
சான்·பிரான்சிஸ்கோ நகராட்சிப் பள்ளி வாரியத் தேர்தல்களில் குடியுரிமை அல்லாதவர்களும் வாக்களிக்கலாமா என்று வாக்காளர்களைக் கேட்கிறார்கள் நகரத்தலைவர்கள். இந்தத் திட்டத்தின் படி, நகராட்சிப் பள்ளியில் குழந்தையைப் படிக்க வைக்கும் பெற்றோர் அல்லது காப்பாளராக உள்ள, வயது வந்த எவருக்கும், குடியுரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும், நகராட்சிப் பள்ளி வாரியத் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. வாக்களிக்கும் உரிமை குடியுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற மாநிலச் சட்டத்தின்கீழ் இந்தத் திட்டத்தை நிறுத்த வழக்காட முடியும் என்றாலும், சான்·பிரான்சிஸ்கோ நகரம் தனக்குரிய சட்டங்களைத் தானே இயற்றிக் கொள்ளும் உரிமைப் பட்டயம் பெற்ற நகரம் என்பதால், மாநிலச் சட்டங்களிலிருந்து விலக்கு பெற முடியும் என்கிறார்கள் நகரத் தலைவர்கள்.
*****
இடது சாரிகளுக்கு என்றும் இருக்கும் குறையொன்று உண்டு. தங்கள் சக குடிமக்களின் புத்திசாலித்தனத்தை மட்டம் தட்டிக் கொண்டு, தன்னை ஆளத்தெரியாத மக்கு ஜனங்களின் 'நன்மைக்காக'த் தீர்வுகளை வலியுறுத்தும் பிரபலமான முற்போக்காளர்கள் இருக்கும் வரை அந்தக் குறை இருக்கும்.
கலி·போர்னியா வாசகர், நியூயார்க் டைம்ஸ் ஆசிரியருக்கு கடிதங்களில்.
***** |
|
"நமக்குப் பழக்கமில்லாத கலாச்சாரமுள்ள எதிரி நம்மோடு மோதும் போது, அவர்கள் நடத்தையை நமக்குப் பழக்கப்பட்ட பண்புகளை வைத்து எடைபோடத் தான் நமக்கு முதலில் தோன்றும்" என்றார் லீ ஹாரிஸ். எடுத்துக்காட்டாக, பின் லாடன் நாம் கண்ணில் பணத்தால் உந்தப்பட்ட குற்றவாளி, ஆழமான கடவுள் நம்பிக்கையால் உந்தப்பட்ட முஸ்லிம் போர் வீரனல்ல - ஏனென்றால், அமெரிக்காவுக்குப் பணம் படைத்த குற்றக் கும்பல்களை மடக்கத் தெரியும். அது மட்டுமல்ல, பின் லாடனும் மற்ற இஸ்லாம்வாதிகளும் நம்மை நம் உரிமைகள், சுதந்திரங்கள், மக்களாட்சிக்காக வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறோம். அமெரிக்காவின் கோட்பாடு முஸ்லிம்களைத் தாக்குகிறது என்றோ, அமெரிக்கப் படைகள் பத்தாண்டுக்கு மேலாக முஸ்லிம் நாடுகளில் மக்களையும் மற்றவற்றையும் சூறையாடி வந்திருக்கிறது என்றோ அவர்களும் மற்றும் பல மில்லியன் முஸ்லிம்களும் நம்புவதால் நம்மை வெறுக்கிறார்கள் என்று நினைப்பதில்லை.
அடையாளமற்ற ஒரு சிஐஏ நிபுணர் (ஏகாதிபத்திய இறுமாப்பு Imperial Hubris)
*****
1971ல் ஜான் கெர்ரியின் செனட் வாக்குமூலம், மார்ட்டின் லூதர் கிங்கின் "எனக்கொரு கனவுண்டு" பேச்சுக்கு அடுத்த இடத்தில் வைக்கத்தக்க ஒப்பற்ற பேச்சு என்றார் சான் டியாகோ கலி·போர்னியா பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் சாமுயெல் பாப்கின். அப்போதெல்லாம் போரை எதிர்த்த பலர் தங்கள் கோழைத்தனத்துக்கு தர்ம முலாம் பூசியவர்கள். ஆனால், ஒருவர், "இதோ பார், நான் மூன்று முறை போரில் விழுப்புண் பெற்றவன், நான் சொல்கிறேன், போரை நிறுத்து" என்று சொல்லும் போது அதன் தாக்கமே தனி. ஜான் கெர்ரியின் அந்தப் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. போர் எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பல்ல என்று காட்டினார் கெர்ரி. பழங்காலத்தில் குடியானவப் புரட்சிக்காரர்கள் ஒரு பிரபுவிடம் போய் எங்களுக்காக உரிமைக்குரல் கொடு என்று வேண்டியதை நினைவூட்டியது அவர் பேச்சு.
பின்னர் பேரா. பாப்கின் தன் புகழ் பெற்ற "சிந்திக்கும் வாக்காளர்" நூலுக்காக கெர்ரியுடன் பழகியபோது கெர்ரி ஒரு வலிமையுள்ள சிந்தனையாளர். ஆனால், கலகலப்பாகப் பழகுபவரல்லர் என்பதை உணர்ந்தார். யோசித்துப் பார்த்தால் அது சரிதான் எனத்தோன்றுகிறது என்கிறார் பாப்கின். உண்மையான வீரர்களும், படைத்தலைவர்களும், போர்க்களத்திலும் அமைதியாக இருப்பவர்கள் ஆல்லி நார்த் போல ஆர்ப்பரிப்பவர்களில்லை. உண்மையான வீரர்கள் சதுரங்க ஆட்டக்காரர்களைப் போல், அமைதியாக இருப்பார்கள். எப்போது தேவையோ அப்போதுதான் விழித்தெழுவார்கள்.
நியூயார்க் இதழ், ஜான் கெர்ரி பற்றி...
*****
வரி விதிப்பு, ஒதுக்கீடு, தடுமாறும் தொழில்நிலையங்களுக்கு வரிவிலக்கு என்று சட்டம் இயற்றி உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் அசுர வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது. தன்னை மாற்றிக் கொண்ட சீனா இப்போது உலகை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தச் சீன நூற்றாண்டின் தொடக்கம் அமெரிக்காவுக்குச் சறுக்கம் என்று திட்ட வட்டமாகச் சொல்வதற்கில்லை. ஒரு வேளை இன்றைய ஐரோப்பாவுக்கு நாம் எப்படியோ, அதே போல் நம்முடைய அமெரிக்காவாக சீனா இருக்கக்கூடும்.
டெட் ·பிஷ்மன், ஹார்ப்பர் மேகசின் கட்டுரையாசிரியர்.
நெடுஞ்செவியன் |
|
|
More
கின்னஸ் சாதனைக்கு ஒரு பட்டுப் புடவை நிவாரண நிதி
|
|
|
|
|
|
|