கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை உளுத்தம் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை வாசகர் கைவண்ணம் பிளம்ஸ் பழ ஜாம்
|
|
பிளம்ஸ் ஊறுகாய் |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
தேவையான பொருட்கள்
பிளம்ஸ் காய் - 10 (நடுத்தர அளவு) மிளகாய் வற்றல் - 15 நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி சீரகம் - 1/4 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 2 சிட்டிகை பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
பிளம்ஸ் காய்களை விதை நீக்கி நறுக்கி அதனுடன் தேவையான உப்புச் சேர்த்து சிறிதுநேரம் ஊறவைக்கவும்.
பிறகு சீரகம், வெந்தயம் போன்றவைகளைத் தனித்தனியாக வாணலியில் வறுத்து எடுக்கவும். வற்றலைச் சிறிது எண்ணெய்விட்டு வறுத்து, பிறகு மூன்றையும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும்.
பின்பு மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாப்பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றைப் போட்டுக் கிளறி 5 நிமிடம் சென்றபின் இறக்கி வைக்கவும்.
எண்ணெய் அதிகம் விரும்புவோர் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த ஊறுகாய் ஒரு வாரம் கெடாமல் இருக்கும். கெடாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
எஸ்.கமலா சுந்தர் |
|
|
More
கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை உளுத்தம் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை வாசகர் கைவண்ணம் பிளம்ஸ் பழ ஜாம்
|
|
|
|
|
|
|