கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை வாசகர் கைவண்ணம் பிளம்ஸ் பழ ஜாம் பிளம்ஸ் ஊறுகாய்
|
|
உளுத்தம் கொழுக்கட்டை |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம் மிளகாய் வற்றல் - 3 பச்சை மிளகாய் - 3 பெருங்காயம் - 1 துண்டு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு அரிசிமாவு - 2 கிண்ணம் நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம் |
|
செய்முறை
அரிசி மாவை வழக்கம் போல் கிளறி துணியில் முடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஊற வைத்துக் களைந்து, மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இட்டிலித் தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
பிறகு எடுத்து உதிர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து உதிர்த்து வைத்துள்ளதைக் கொட்டி வதக்கும் போது பெருங்காயம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவைச் சிறு கிண்ணம் போல் சொம்பு செய்து நடுவில் பூரணம் வைத்து நீளவாட்டில் மூடி ஆவியில் வைத்து எடுக்கவும். எண்ணெய் தொட்டுக் கொண்டு மூடவேண்டும்.
உளுத்தம்பருப்பு (1 கரண்டி) கடலைப் பருப்பு (1 கரண்டி), துவரம் பருப்பு மூன்றும் சேர்த்துப் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தாலும் சுவையாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை வாசகர் கைவண்ணம் பிளம்ஸ் பழ ஜாம் பிளம்ஸ் ஊறுகாய்
|
|
|
|
|
|
|