காய்கறி வறுவல் கோஸ் சாதம் சீரகம் சாதம் வெஜிடபிள் சால்னா அப்பளம் சாதம் நவரத்ன குருமா காலி·பிளவர் மஞ்சூரியன்
|
|
|
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 250 கிராம் புதினா - 1 கோப்பை வெங்காயம் - 4 பட்டை - சிறிதளவு ஏலக்காய் - 4 கிராம்பு - 6 நெய் - 50 கிராம் மசாலா இலை - சிறிதளவு முந்திரி திராட்சை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
ஒன்றரை டம்ளர் தண்ணீரில் புதினா இலையையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
கழுவிய பாசுமதி அரிசியை வாணலியில் போட்டு நெய் விட்டு இலேசாக வறுத்தெடுக்க வேண்டும். வறுத்த அரிசியைக் கொதிக்கும் புதினா நீரில் கொட்டி விட வேண்டும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை வறுத்து வேகும் அரிசியுடன் கொட்டி விட வேண்டும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி மொத்தக் கலவையையும் குக்கர் தட்டில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி விடவும்.
ஐந்து நிமிடம் வரை காத்திருந்து விட்டு குக்கரைத் திறந்தால் புதினா புலவு தயார். நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி மற்றும் திராட்சையைப் புலாவ் மீது தூவி விட்டால் புதினா புலவு முழுமையாகத் தயார்.
காஞ்சனா |
|
|
More
காய்கறி வறுவல் கோஸ் சாதம் சீரகம் சாதம் வெஜிடபிள் சால்னா அப்பளம் சாதம் நவரத்ன குருமா காலி·பிளவர் மஞ்சூரியன்
|
|
|
|
|
|
|