என்ன நடந்தது தமிழக அரசியலில்... தமிழக அரசியலில் - Next... தமிழக அரசியலில் - Re'play' முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவை உறுப்பினர்கள்
|
|
தமிழக அரசியலில் குறிப்பிடும்படியான சில தகவல்கள் |
|
- சரவணன்|ஜூன் 2001| |
|
|
|
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தலை மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித் துள்ளனர். கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட புணவாசிப்பட்டி வாக்குச் சாவடியில் ஒரேயொரு வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் வத்தல்மலை, திருச்சி மாவட்டம் உப்பிலியா புரத்திலுள்ள பாலகிருஷ்ணன் பட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள நொய்யமலை, ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னம்புத்தூர் ஆகிய கிராம மக்கள் ஒருவர் கூட வாக்களிக்காமல் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பெருவாரியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெரம்பூர், ராயபுரம், துறைமுகம், பூங்கா நகர் பகுதிகளில் வாக்களிக்க மக்களை அனுமதிக்காததால் அடையாள அட்டையைக் கிழித்தெறிந் திருக்கின்றனர்.
வாக்காளர்களுக்குத் தங்களுடைய கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த ஏதுவாக தக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்றது தேர்தல் ஆணையம். ஆனால் நிலக்கோட்டை தொகுதி யிலுள்ள மீனாங்கண்ணிப்பட்டி, கொண்டைய மூப்பனூர், பண்ணைப்படி கிராமாங்களைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிக்கு வரப் பயந்து இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளார்கள்.
இந்த முறை மட்டும்தான் சட்டசபைக்கு அதிகமான பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 24 பேர்.
இந்தத் தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம்; நடிகர்களுக்கு செல்வாக்குக் குறைந்துள்ளது. 'சித்தி' ராதிகா, சித்தப்பா சரத்குமார் இருவரும் அதிரடிப் பிரச்சாரம் செய்தும் கணிசமான வாக்குகளைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. சென்ற தேர்தலின் போது ரஜினிக்கு இருந்த செல்வாக்கு இந்தத் தேர்தலில் அவருக்கு இல்லை. பெரும்பாலான மக்கள் ரஜினி சொன்னாலும் அவர் சொல்கிறவர்களுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லையென்று கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தத் தேர்தலில் தெருமுனைக் கூட்டங்கள் அனைத்தும் அட்டர் பிளாப். கழகத் தலைவர்களின் வீராவேசமான பேச்சுக்கள் அடங்கிய ஒலிநாடாக்கள் கேட்பாரின்றி தெருவில் இறைந்து கொண்டிருந்ததுதான் மிச்சம். கணிசமான அளவிற்கே தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களின் வரவேற்புக் கிடைத்துள்ளது.
தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகன் துறைமுகம் தொகுதியில் வெறும் 336 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். துறைமுகம் தி.மு.கவின் கோட் டை என்ற பழைய கணக்கு இந்த அதிர்ச்சி முடிவால் சிதறிப் போயிருக்கிறது. அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன் 23889 வாக்குகளும் அன்பழகன் 24225 வாக்குகளும் பெற்றுள்ளனர். |
|
தி.மு.கவின் ஜனநாயகவாதி என அழைக் கப்படும் பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதி யில் 86 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். மிகப் பிரச்சனைக்குரிய தொகுதி யான இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவின் சார்பில் ஜான்பாண்டியன் களமிறக்கப் பட்டிருந்தார். தேர்தல் நாளன்று இரு தரப்பினருக்குமிடயே மோதல் வலுத்தது. தற்சமயம் பரிதி மற்றும் ஜான்பாண்டியன் இருவரும் கம்பி எண்ணிக் கொண்டிருக் கின்றனர்.
தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்திரன் இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். பூங்கா நகர் தொகுதியின் தத்துப் பிள்ளை என்கிற இமேஜ் சரிந்திருக்கிறது.
தி.மு.கவில் பங்கு பெற்றிருந்த சாதிக் கட்சிகளின் தலைவர்களில் திருமாவளவனைத் தவிர மற்ற அனைவரும் படு தோல்வியைச் சந்தித்திருக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா 4111 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவைச் சேர்ந்த ராஜேந் திரன் வெற்றி பெற்றுள்ளார்.
பொன்னேரி தொகுதியில் போட்டியிட்ட பால்வளத்துறை அமைச்சர் சுந்தரமும் படு தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான கண்ணனை விட 27,390 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி யடைந்துள்ளார்.
சரவணன் |
|
|
More
என்ன நடந்தது தமிழக அரசியலில்... தமிழக அரசியலில் - Next... தமிழக அரசியலில் - Re'play' முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவை உறுப்பினர்கள்
|
|
|
|
|
|
|