ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம் கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம் சினிமா கற்பித்த பாடம் ஏலேலோ ஐலசா கலைஞரின் வசன மழைகள் திரையுலக வரலாற்றில்......
|
|
பத்ரி - திரைப்பட விமர்சனம் |
|
- தமிழ்மகன்|ஜூன் 2001| |
|
|
|
நடிப்பு : விஜய், பூமிகா, மோனல், விவேக், தாமு, சஞ்சய், ரியாஸ்கான், மலேசியா வாசுதேவன், கிட்டி, பாண்டு, ஹ¤சைனி, பூபேந்தர், அனுமோகன், மீனாகுமாரி இயக்கம் : பி.ஏ.அருண்பிரசாத் இசை : ரமண கோகுலா ஒளிப்பதிவு : ஜெயனன் வின்சென்ட்
ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியைச் சேர்ந்தவர் விஜய். பணக்கார மாணவர்களோ, காதில் கடுக்கண் அணிந்து ஏகப்பட்ட ஜீன்ஸ் கிழிச்சல் ஆடைகளோடு பெண்களோடு அமர்ந்து பீர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கும் அந்தமாதிரி ஒருநாளாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது.
இந்த நேரத்தில் பணக்காரக் கல்லூரிக்கு வரும் மாணவி (லெக்சரர் என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்) மோனலுடன் பணக்காரராக நடித்து இண்டர் நெட் சென்டருக்கும் போய்விடுகிறார் விஜய். (அதுசரி இண்டர்நெட் சென்டர் என்றால் நம்பியார்களும் பொன்னம்பலங்களும் நிறைந்த காபரே நடன சூதாட்டக்களம் போல காட்டி யிருக்கிறார்களே).
மோனல் மீதுள்ள மோகத்தால் தன்னை உண்மையாக நேசித்துக் கொண்டிருக்கும் பூமிகா விடம் விஜய், காசு பறிப்பதும் கார் வாங்கிக் கொண்டு போவதும் பூமிகாமீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
ஒருகட்டத்தில் 'பணக்காரர்களின் புத்தி'யை உணர்ந்து, அதே பணக்காரர்களால் பாதிக் கப்பட்டு பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ளமுடியாமல் இருக்கும் அண்ணனின் சவாலை நிறைவேற்றி, அப்பாவின் நல்லெண் ணத்துக்கும் பாத்திரமாகி, பூமிகாவையும் ஏற்றுக் கொள்கிறார்.
விஜய்யின் தந்தையாக கிட்டி. பூமிகாவின் தந்தையாக மலேசியா வாசுதேவன். காமெடிக்கு விவேக், தாமு. பளிச் சென்று தெரியும் செட்டுகள்.... 'தினமும் யார்கிட்டயாவது தகராறு பண்ணுவானே அந்த பத்ரி எங்கப்பா' என்று கேட்ட அடுத்த காட்சியில் விஜய் கை- காலெல்லாம் கட்டுக்களுடன் காலேஜுக்குள் நுழைவது என்று படம் முழுக்க தெலுங்கு டச்.
தெலுங்கு இசை தமிழ்ப் பாடல்களுடன் ராசியாகவில்லை. தண்ணீரோடு கலந்த எண்ணெய்யாக மிதக்கிறது. |
|
அண்ணனின் சவாலை நிறைவேற்றுவதற்காகவும் தனக்கும் குடும்ப மானத்தில் அக்கறையிருப்பதை நிறைவேற்றுவதற்காகவும் விஜய் பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் காட்சிகள் ஆவேசமானவை. ஆக்ஷன் காட்சிகளில் அனுபவித்து நடிக்கிறார். அதற்காக கை விரல்கள்மீது மாருதி காரை ஏற்றிக் கொள்வது என்னவகை பயிற்சி என்று தெரியவில்லை.
பூமிகா பேசும் குளோசப் காட்சிகளில் உதட்டசைவைப் பற்றிக் கவலைபட்டதாகத் தெரியவில்லை. 'மைனே பியார் கியா' பாக்ய ஸ்ரீயை ஞாபகப்படுத்துகிறார் பூமிகா. அந்த அழகுக்காக அடுத்த படம்வரை அவரை மன்னிக்கலாம்.
சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'ராக்கி' படத்தைப் பார்த்தவர்களுக்கு பத்ரி, 'ஏழைகளின் ராக்கி'.
தமிழ்மகன் மானத்தில் அக்கறையிருப்பதை நிறைவேற்றுவதற்காகவும் விஜய் பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் காட்சிகள் ஆவேசமானவை. ஆக்ஷன் காட்சிகளில் அனுபவித்து நடிக்கிறார். அதற்காக கை விரல்கள்மீது மாருதி காரை ஏற்றிக் கொள்வது என்னவகை பயிற்சி என்று தெரியவில்லை.
பூமிகா பேசும் குளோசப் காட்சிகளில் உதட்டசைவைப் பற்றிக் கவலைபட்டதாகத் தெரியவில்லை. 'மைனே பியார் கியா' பாக்ய ஸ்ரீயை ஞாபகப்படுத்துகிறார் பூமிகா. அந்த அழகுக்காக அடுத்த படம்வரை அவரை மன்னிக்கலாம்.
சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'ராக்கி' படத்தைப் பார்த்தவர்களுக்கு பத்ரி, 'ஏழைகளின் ராக்கி'.
தமிழ்மகன் |
|
|
More
ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம் கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம் சினிமா கற்பித்த பாடம் ஏலேலோ ஐலசா கலைஞரின் வசன மழைகள் திரையுலக வரலாற்றில்......
|
|
|
|
|
|
|