வானவில்! - ஹைக்கூ கவிதைகள் வர்ண சிநேகிதம் ஜன்னல் மனிதர்கள் விளையாட்டு
|
|
|
ஈச்சம் பழம் விற்கும் கிழவிகள் காணாத மரத்தடி வெறுமையாய்-
கடைக்குப் போனால் ஒரு கை கடலை அல்லது அரை அச்சு வெல்லம் தந்து துளி சிரிப்பும் தந்தனுப்பும் செட்டியாரும் காணாமல்-
பாட்டிக்குத் திவசம் முடித்து கொல்லையில் கூப்பிட்ட குரலுக்கு கும்பலாய் வந்து கவளம் பொறுக்கக் காக்கைகளும் வாராமல்-
சாமத்தில் நல்ல சேதி சொல்லி தெரு வழி போகும் குடு குடுப்பைக்காரனும் இல்லாமல்- |
|
பள்ளிக்கு அழைத்துப் போக வாசலில் புளியம் பிஞ்சுகளோடு பொறுமையாய்க் காத்திருக்கும் சினேகிதர்கள் காணாமல்-
வெறுமையாய் அடுத்த வீட்டுக்காரனின் பெயர் மறந்து போகும் அவலம் தொலைக்கப் பெயர் குறிக்க டைரி தேடும் பொழுதுகள்
நிஜமாய்ப் போனதற்காய்ப் புலம்புதல் தகாதென கேலிகள் எழும்போது,
போனதை நினைத்தல்ல புலம்பல் வருவதை நினைத்தெனச் சொல்லவும் மனசின்றி
நான் |
|
|
More
வானவில்! - ஹைக்கூ கவிதைகள் வர்ண சிநேகிதம் ஜன்னல் மனிதர்கள் விளையாட்டு
|
|
|
|
|
|
|