காதல் வைரஸ் ரெடி டேக் குடிமகள்கள் உடான்ஸ் டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான் கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர் ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம் மின்னலே - திரைப்பட விமர்சனம்
|
|
தோஸ்த் ரெடி டேக் |
|
- |மார்ச் 2001| |
|
|
|
'வேலுச்சாமி', 'மிஸ்டர் மெட்ராஸ்', 'கோகுலத்தில் சீதை', 'தர்மசக்கரம்', 'ப்ரியமுடன்', 'உன்னைத் தேடி', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 15 ஆவது படம், 'தோஸ்த்'.
சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'வானவில்' அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் ரகுவரன், பிரகாஷ் ராஜ், விவேக், இந்து, ஒய்.எஸ்.டி. சேகர், 'தளபதி' தினேஷ், 'மகாநதி' சங்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 18-ம் தேதி துவங்கியது. முதல்நாள் காட்சியாக சரத்குமாரும் அபிராமியும் ஆடிப்பாடும் காட்சி படமாக்கப்பட்டது.
ஏவி.எம்.மில் நடந்த இப் பாடல் காட்சியின் போது இயக்குநருக்கு அவ்வளவாக வேலையில்லை. ஏனென்றால் அவருடைய கவனம் ஊழல் அரசியல்வாதிகளைத் தோலுரிப்பதில் இருந்தது. இயக்குநர் யார் என்று இன்னுமா யூகிக்க முடியவில்லை? யெஸ்... சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இஷ்டம் போல விளையாடும் எஸ்.ஏ.சந்திரசேகரந்தான் இப் படத்தை இயக்கி வருகிறார்.
எதிர்பார்த்தைப் போலவே ''சட்டம் ஒரு இருட்டறை', 'நீதிக்குத் தண்டனை', 'சாட்சி' போன்ற வித்தியாசமும் விறுவிறுப்பும் கொண்ட கதை இது'' என்று விளக்கம் கொடுத்தார் இயக்குநர். |
|
சரத்குமார் கதாநாயகனாக நடிக்க இவர் இயக்கும் முதல் படமும் இதுதான். அதனால் கூடுதல் விறு விறுப்புக்கு வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதையை ஷோபா சந்திரசேகரன் எழுதியுள்ளார். இயக்குநர் பார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆர். சுவாமிநாதன் வசனம் எழுதுகிறார். தேவா இசை அமைக்கிறார். ஜாக்குவார் தங்கம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.
கே. முரளிதரன், வி. சுவாமிநாதன், ஜி. வேணுகோபால் இணைந்து தயாரிக்கும் படம் இது.
பார்வையாளன் |
|
|
More
காதல் வைரஸ் ரெடி டேக் குடிமகள்கள் உடான்ஸ் டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான் கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர் ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம் மின்னலே - திரைப்பட விமர்சனம்
|
|
|
|
|
|
|